பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கி. வா. ஜ. பேசுகிறார்

லாம் விளைவு குறைந்து விடும். மலையுள்ள இடங்களில் பஞ்சத்தின் கொடுமை உடனே தாக்காது. மரங்களும், அருவி களும் நிரம்பிய மலை பஞ்ச காலத்தில் மக்களுக்கு ஒரு சேம. நிதிபோலப் பயன்படும். ஆசிரியர் வறப்பினும் வளந்தரும் வண்மை உடையவராக இருக்கவேண்டுமென்று இலக்கணம் சொல்கிறது. பொருட் பஞ்சம் ஏற்பட்டாலும் அறிவுப் பஞ்சம் வராமல் பாதுகாப்பது அவர் கடமை. இவ்வளவு விஷயங்களையும் சேர்த்து இலக்கணம் ஒரு சூத்திரத்தில் சொல்கிறது.

அளக்கல் ஆகா அளவும் பொருளும் துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே.

துளக்கல்-அசைத்தல். வறப்பினும்-பஞ்சம் வந்தாலும், கலைபயின்ற தெளிவுடைய ஆசிரியர் துலாக்கோலைப் போல ஐயமின்றிப் பொருளின் மதிப்பைத் தெரிவிக்க வேண் டும். ஒரு பண்டத்தை நிறுக்கிறோம். தராசுமுள் நடுநிலை யில் நின்றால்தான் பொருளின் உண்மைக் கனம் தெளி: வாகும். ஒரு பொருளையும் நிறுக்காமல் தராசை முதலில் தூக்கிப் பார்த்து முள் நடுநிலையில் நிற்கிறதா என்று. தெரிந்துகொண்ட பிறகே நிறுப்பது வழக்கம். முள் ஒரு. பக்கமாகச் சாய்ந்தால் நியாயமான வியாபாரி அதைக் கையால்கூடத் தொடமாட்டான். ஆசிரியர் நூற்பொருளை நிறுத்து உணர்ந்துகொள்ள வேண்டும். தம்முடைய விருப்பு வெறுப்பினால் நூலில் உள்ள கருத்தைக் கூட்டியோ குறைத்தோ சொல்லக் கூடாது. சாதி, சமயம்,கொள்கை களால் வேறுபட்ட புலவர் ஒருவர் இயற்றிய நூல் ஒன்றைப் பாடம் சொல்லும்போது தம் கொள்கைக்கு மாறுபட்டது. என்ற காரணத்தால் அதைக் குறைத்துக் கூறக் கூடாது. நூல்களைத் தாம் ஆராய்ந்தாலும், கற்பித்தாலும் நடுநிலை