பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2.2 கி. வா. ஜ. பேசுகிறார்

என்று மலரின் இயல்பைச் சொல்லும் வாயிலாக வாத்தியார் ஐயாவின் இயல்பையும் குறிப்பாக இலக்கண ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு உபமானங்களால் உபாத்தியாயருடைய தகுதியை அளவிட்டு விட்டு. 'உலகியல் அறிவும் இவை போன்ற வேறு சிறந்த குணங்களும் உடையவன் ஆசிரியன்’ என்று தமிழிலக்கணக்காரர் சொல்கிறார். எவ்வளவு தான் படித்தாலும், நல்ல குணம் உடையவராக இருந்தாலும் உலகம் தெரியாவிட்டால் என்ன பிரயோசனம்? காலத்துக்கு ஏற்றபடி போதனா முறைகள் மாறும்; உதாரணங்கள் மாறும்; கொள்கைகள் மாறும்; இலக்கணமே மாறும். இவற்றை யெல்லாம் உணர்வதற்குப் பழைய நூலறிவு மாத்திரம் போதாது. உலகமே ஒரு பேரிய புஸ்தகம். அதை உணராவிட்டால் வாத்தியார் படித்த புஸ்தகங்கள் அவ்வள வும் பயன்படாமற் போய்விடும். ஆகையால் எல்லாவற்றை யும் சொல்லிவிட்டுக் கடைசியில் உலகியலறிவு வேண்டு மென்று விதிக்கிறார்கள்.

வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கமாக ஞாபகப்படுத்திக்கொள்ள இதோ இலக்கணக் சூத்திரம் இருக்கிறது.

குலன் அருள், தெய்வம் கோள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை,நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும், உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவள் நூல்உரை ஆசிரி யன்னே. tநிறைகோல்-தராசு. மாட்சி-பெருமை. இணைய-இத்தகை Iussieu] . -

... - - - 5 . வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும் என்று. சொல்லுவதோடு நில்லாமல் இலக்கணம் எழுதினவர்கள்