பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா í 3 I

என்ற பட்டம் சுலபமாகக் கிடைக்கக் கூடியதென்று தெரிய வில்லை,

7

வாத்தியார் ஐயா தொழிலாளி அல்ல. தமிழர் கொள்கைப்படி அவர் ஒரு தாதார வள்ளல். மாணாக்கர்கள் இரவலர். திருவள்ளுவர் , "பணக்காரருக்கு முன்னால் நின்று யாசிக்கும் இரவலரைப் போல ஆசிரியரிடம் கல்வியை யாசித்து ஏங்கி நின்று கற்றவர் மேன்மை அடைவார்; அப்படிக் கல்லாதவர் கடைப்பட்டவர்' என்று சொல்கிறார். பாடம் சொல்லிக் கொடுப்பது ஒரு தொழில் அல்ல; கலை. அது ஒரு தியாகம். அழியும் பொருட்செல்வத்தை வழங்கும் வள்ளலைக் காட்டிலும் அழியாத கல்விச்செல்வத்தை வழங் குப் வள்ளல் பெரியவர்; சமுதாயத்தின் கொழுந்து அவர். அவர் பாடம் சொல்வதை 'ஈதல்' என்றே இலக்கணக்காரர் சொல்கிறார். . -

கல்விக் கொடை எப்படி நிகழ வேண்டும்? என்பதை இலக்கணக்காரர்கள் வகுத்திருக்கிறார்கள். வாத்தியார் ஐயா பாடம் சொல்லிக் கொடுக்கும் முறைதான் அது. பாடம் சொல்லும் காலம் ஏற்றதாக இருக்க வேண்டும். மூளையைப் பொறுத்த விஷயம். ஆகையால் இயற்கையின் சார்பினால் சோர்வோ, துன்பமோ இல்லாத காலம் நன்மை பயக்கும். சந்தையிரைச்சலுள்ள இடத்திற்கு நடுவே பள்ளிக் கூடம் இருக்கலாமா? கல்விக்கு மன ஒருமைப்பாடு அவசியம், கடவுளைக் கும்பிடும் கோயில் நல்ல இடத்தில் அமைந்திருப் பதைப் போலக் கல்விச் சாலையும் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். நல்ல இடத்தைத் தேர்ந்தெடுப்பது அந்தக் காலத்தில் வாத்தியார் கடமை.

பழங் காலத்து வாத்தியார் ஐயா பாடம் சொல்லத் தொடங்குகிறார்.