பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் சரித்திரமும் Jリ

தென்குமரி வடபெருங்கல், குணகுடகடலாவெல்லை: யாகிய நாட்டை ஒருவன் ஆள்வதுதான் அவர்களுடைய ஆசைக்கு எல்லை. இந்த எல்லைக்குள் அடங்கிய நாட்டை நாவலந்தீவென்று வழங்குவரெனப் பிற நூலால் தெரிய வருகின்றது. தென்குமரி என்பதால் இப்போதுள்ள குமரி முனையையன்றிச் சில பழைய பாடல்களில் குமரியாற்றை யும் குறிப்பதுண்டு. வடபெருங்கல்லை, பணிபடு நெடுவரை' என்று சொல்வதனால் இமாசலத்தைத்தான் குறிக்கின்றன ரென்பதில் சந்தேகம் வேண்டாம். அதுமாத்திரம் அன்று;. இன்று கிஞ்சின்ஜிங்கா என்று நாம் ஆங்கிலப் பள்ளிக்கூடத் தில் கற்றுக்கொள்ளும் மழலைப் பெயரின் மூல உருவமாகிய காஞ்சன சிருங்கம் என்னும் ஒரு பகுதி, அவ்விமய மலையில் உண்டென்பதையும் தமிழர் தெரிந்துகொண்டிருக்கின்றனர். இல்லாவிட்டால் பொற்கோட்டிமயம்', 'பொன்படு' நெடுங்கோட்டிமயம்” என்றெல்லாம் சொல்ல வராதே? அந்த இமயச் சாரவில் முனிவர்கள் பலர் வாழ்வார்களாம். அம்முனிவர்கள் அக்கினி காரியம் செய்யும்போது பெண் மான்களெல்லாம் அந்த ஆசிரமங்களில் சிறிதும் அச்ச மின்றித் துரங்குமாம். புவி முதலிய விலங்குகள் 'முத்தி' விளக்குக்குப் பயத்து வராமற் போகும். இமயச் சாரலில் கவரிமான்கள் அதிகமென்று தமிழர் அறிந்திருக்கிறார்கள். ஒரு சேரன் இமயமளவும் சென்று தன்னுடைய விற். கொடியை அதன் மேலே பொறித்துவிட்டு வந்தான்.

இன்று நாம் வங்காளக்குடாக் கடலென்று வழங்குவ, தாகிய குண கடலைப்பற்றி ஒரு புதுமை புறநானூற்றிலும் வேறு நூல்களிலும் காணப்படுகிறது. அதைத் தொடுகடல்: என்று சொல்லி யிருக்கிறார்கள். 'கரைபொருதொடு கடல் என்பர். அதற்குத் தோண்டிய கடல் என்பது பொருள். உரையாசிரியர், "சகரரால் தோண்டப்பட்ட சாகரம்" என்று. எழுதுகிறார். இது புதிதாகத் தோண்டிய கடலாகிவிடவே, மேல்கடலாகிய அரபிக்கடல் "குடாஅதுதொன்றுமுதிர்