பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置器剑 கி. வா. ஜ. பேசுகிறார்

பாழாக்குதலும் அஞ்சுதகு செய்திகளாம். பகைவர் பாற் பெற்ற கலங்களைப் பரிசிலர்க்கு ஈந்தும், பகைவர்களின் முடிப் பொன்னால் கழல் செய்து தாம் அணிந்தும், அவர் களுடைய யானையின் ஒடைப் பொன் கொண்டு பொற்றா மறைப் பூச்செய்து பாணர்க்கு உதவியும் அரசர் தம் வெற்றியைக் கொண்டாடுவர். -

களவேள்வி, இராஜசூயம் முதலிய வேள்விகளைச் செய்த அரசர் சிலர் உண்டு. போர்க்களத்து மடிந்த வீரர். களுக்கும், வேந்தர்களுக்கும் வீரக்கல் நட்டுப் போற்றுவது தமிழர் மரபு. வவியச் சாவை எதிர்கொண்டழைக்கும் வீரர் களைப்போல் வடக்கிருத்தலென்னும் விரதத்தை மேற்: கொண்டு, முழுஉ வள்ளுரம் உனக்கும் மள்ளர்களாக உயிர்நீத்த பெரு வீரர்களர்கிய கோப்பெருஞ் சோழன் முதலியவர்களும் நடுகல்லாயினர்.

இங்ஙனம் ஈகையாலும், முறை செய்தலாலும், வீரத் தாலும் புகழ் பேற்ற மன்னர்களும் பிறரும் தமிழ் நாட்டை நல்ல நிலமாக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய சரித்திரத் தைப் புலப்படுத்தும் மூலபண்டாரமாகப் புறநானூறு: விளங்குகின்றது.

கனம் கிருஷ்ணையர்

எவ்வளவோ சங்கீத வித்துவான்களுடைய கச்சேரி களை நாம் கேட்கிறோம். அந்த வித்துவான்களுடைய சாரீரத்தைப் பாராட்டுகிறோம். சில பேரைப்பற்றிச் சொல்லும் போது, "அவருக்கு நல்ல சாரீரம்" என்று கூறு கிறோம். நாம் எந்த விஷயத்தை நினைத்து கன சாரீரம் என்று கூறுகிறோம்? ஆள் கனமாக இருக்கிறாரென்றா? ல்லை. அந்தச் சாரீரம் அனமாக வெள்ளம் வருவதுபோல்