பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே எழுத்து 179

ஆதீன வித்துவான். நானும் ஆதீன வித்துவானா!' என்று அவர்களுடைய உள்ளம் எண்ணியது. அக்காலத்தில் ஆதீன கர்த்தராக விளங்கிய மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், ஐயரவர்களிடத்தில் அளவற்ற அன்பு பூண்டவர். சில நூல் களை அவர்களுக்குப் பாடஞ் சொன்னவர். ஐயரவர்களுக்கு இறுதிக் காலம் வரையில் தேசிகரிடம் இருந்த பேரன்பும் நன்றியறிவும் சொல்லில் அடங்குவன அல்ல. அவர்களோடு ஒரு நாள் பழகினாலும், திருவாவடுதுறை ஆதீனத்தையும் சுப்பிரமணிய தேசிகரையும் பற்றி அவர்கள் ஒரு முறை யாவது சொல்வதைக் கேட்கலாம். தேசிகர் ஐயரவர்களுக்கு எழுதிய கடிதங்களில் நமது ஆதீன மகாவித்துவான் என்று எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகர் புலவர்களையும் அடியார்களையும் கண்டு சல்லாபம் செய்யும் இடமாஜய, ஒடுக்கத்தில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி வடமொழி தென்மொழி வித்துவான்களும் வேறு பல அடியார்களும் இருந்தனர். ஐயரவர்களும் அங்கே இருந்தார்கள்.

அப்பொழுது அங்கே ஒரு வைஷ்ணவத் தமிழ் வித்து வான் வந்தார். அவர் ஆங்கிலமும் தெரிந்தவர். தேசிகர் அவரை வரவேற்று உட்காரச் செய்தார். அவருடைய கேம லாபத்தை விசாரித்தார். பிறகு அங்குள்ள வடமொழி வித்துவான் ஒருவரோடு, வந்த வைஷ்ணவர் பேசத் தொடங் கினார். பேச்சு யோகrேமத்தில் ஆரம்பித்து சாஸ்திரத் திலே புகுந்து சைவ வைஷ்ணவ பேத சர்ச்சையில் இறங் கியது. திருமால் அவதாரங்களின் சிறப்பையும் சிவபெரு மான் அவதாரங்களின் இயல்பையும் ஐயங்கார் எடுத்துச் சொன்னார். வடமொழி வித்துவானாகிய சாஸ்திரிகள் அந்த அவதார தத்துவங்களைச் சாஸ்திரப் பிரமாணங் களுடன் விளங்கினார். வித்துவான்களுக்குள் விவாதம் தேர்ந்தால் கேட்பவர்களுக்கு லாபம் அல்லவா? சபையில்