பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹器艺 கி. வா. ஜ. பேசுகிறார்

அமைந்திருக்கும் போது என் செய்வது! அவர் யோசித்துப் பார்த்தார்; ஒன்றும் புலப்படவில்லை. அதுவரைக்கும் சடசடவென்று சாஸ்திரிகளோடு பேசி வாதம் செய்தவர் பேசாமல் கல்லுருவம்போல் ஆகிவிட்டார். அவர் உடம் பெல்லாம் வேர்த்தது.

அவர் கோலத்தைப் பார்த்து அங்கிருந்த வித்துவான் கள் ஆச்சரியமுற்றார்கள். அவர்பால் முன்பு காணப்பட்ட படபடப்பும் பின்பு காணப்பட்ட மாறுபாடும் அவர்களை வியப்புக் கடலில் ஆழ்த்தின. Հue

கடைசியில் வித்துவான், 'இப்போது புலப்படவில்லை. ஆலோசனை செய்து சொல்லுகிறேன்' என்று சொல்லி, சிறிது நேரத்தில் எழுந்து விடைபெற்றுக்கொண்டு சென்று விட்டார்.

அச்சுப் புஸ்தகத்தில் அக்காலத்தினருக்கு இருந்த நம்பிக்கை அளவற்றது. அதில் பிழை இருக்கலாமென்ற நினைவே அவர்களுக்கு இராது. வைஷ்ணவ வித்துவான் பாட்டின் பாடம் பிழையாக இருக்கலாமென்று நினைக்கவே இல்லை.

அவர் எழுந்து சென்றவுடன் சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களைப் பார்த்து, 'என்ன சாமிநாதையர், அந்தப் பாட்டுக்குப் பொருள் உமக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்.

'இந்தப் பாடம் தவறென்று எண்ணுகிறேன். அறுபதி னாயிரர் எனினும் ஆண்டகைக்கு, உறுதியில் ஒன்றிவர்க்கு உணர்வு என்று உண்ணலாம், பெறலருஞ் சூழ்ச்சியர் என்ற பாடம் ஏட்டுச்சுவடியில் இருந்தது. தசரதனுக்கு அறுபதி னாயிரம்பேர் மந்திரிகளானாலும் இவர்கள் அனைவருக்கும் உணர்வு ஒன்றே என்று சொல்லும்படியான ஆலோசனைத் திறமுடையவர் என்று பொருள் செய்வதற்கு இந்தப் பாடம் உதவியாக இருக்கிறது. பொருள் சிறப்பாக இருப்பதனால்