பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசனத்துக்கு விஷயம் Ꮾ3:

வசனத்துக்குத் தமிழில் சரக்கு எங்கே இருக்கிறது?" என்று கேட்கின்றனர். மேல்தாட்டு வசனத்துக்குச் சரக்கு, விஷயம், எங்கே இருந்தது? மனோபாவனையின் வளப்பம் ஒன்றையே துணையாகக் கொண்டு அவர்கள் வசன சிருஷ்டி செய்து விட்டார்களா? இல்லை. அவர்களுக்குப் பழைய இலக்கியங்கள், சரித்திரங்கள் முதலியவை மூலப் பொருள் களாக உதவின. அவற்றையெல்லாம் அவர்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார் கள். பழைய சரக்கையெல்லாம் அவர்கள் பயன்படுத்திக் கொண்டபடியால் புதிய சரக்குகளைத் தேடுகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே அமைந்த சில பழஞ்சரக்குகள், மூலக் கருவிகள் இருக்கின்றன. அவற்றை இலக்கிய சிருஷ்டியிலே பயன்படுத்திக் கொண்டால் அந்த இலக்கியத்தில் ஒரு தனிப்பண்பு புலனாகும். -

தமிழில் வசன சிருஷ்டி இளம் பருவத்தில் இருக்கிறது. பழைய கருவிகள் பலவற்றை இன்னும் நாம் தொடாமலே இருக்கிறோம். பழைய இலக்கியத்திலே புதைந்து கிடக்கும் காட்சிகளையும் கருத்துக்களையும் எடுத்து அவற்றின் பழைய தோற்றத்தை மாற்றிப் புது மெருகிட்டுக் கொடுக் கலாம். தமிழ்நாட்டு சரித்திரத்திலே மனிதனுடைய உணர்ச் சியைக் கிண்டிவிடும் நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்காக உண்டு. அவற்றைக் கண்டு பிடித்து விரித்து இனிய வசனத்தில் புதிய சிருஷ்டிகள் செய்யலாம். ஊர்தோறும், குடும்பங்கள்தோறும் கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்டுவரும் பல சுவை. யுள்ள வரலாறுகளை அறிந்து அழகுபடுத்திக் காட்டலாம். தமிழ் நாட்டில் எவ்வளவோ ஸ்ம்ஸ்தானங்கள், ஜமீன்கள் இருந்தன. ஒவ்வொரு ஸம்ஸ்தான சம்பந்தமாகவும் எழுதப் படாமல் நிற்கும் சரித்திரங்கள் பல உண்டு. வீரத்தையும் மனிதனுடைய உயர்குணங்களையும் இழி குணங்களையும் சித்திரிக்கும் செய்திகள் பலவற்றை அந்தச் சரித்திரங்களில்