பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பழங் காலத்தில் கண்ணுக்கும் காதுக்கும் கருத்துக்கும் இன்பத்தை அளிக்கக் கூடியதாக இருந்தது நாடகம். காவி யத்தைக் காதிலே கேட்டு அனுபவிக்கலாம். அதனால் அதைச் சிராவ்ய காவியம் என்பார்கள். நாடகத்தைக் கண்ணாலே கண்டு அநுபவிப்பதனால் அதற்குத் திருசிய காவியம் என்ற பெயர் வழங்கியது. அந்தக் கொள்கையின் படி பார்த்தால் குருடன் நாடகத்தை ரசிக்க முடியாது.

விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சியானது மனிதன் கனவி லும் எதிர்பாராத பல அதிசயங்களை அன்றாட வாழ்க்கை யில் புகுத்தி யிருக்கிறது. நம்முடைய மூதாதையர் யாரேனும் ஒருவர் திடீரென்று உயிர் பெற்றெழுந்து இந்த உலகத்தில் உலவத் தொடங்கினால் இடந்தோறும் அவர் புதிய புதிய அதிசயத்தைக் கண்டு விம்மி ஆச்சரியத்துள் மூழ்கி அந்த மருட்சியினாலேயே மீண்டும் செத்துப் போய் விடுவார்.

நாடகம் கண்ணாலே நுகர்வதற்குரியது என்ற இலக்க

ணத்தையும், திருசிய காவியம் என்ற அதன் பெயரையும் போக்கிவிட்டது இன்று வந்த ரேடியோ, மற்றும் ஒளிபரப்புக் சாதனங்கள். வானொலியில் வெறும் ஒலி விசித்திரங்களைக் கொண்டே நாடகம் நடத்தப்படுகிறது. காவியத்தைப் படிக்கும்போது சொற்பொருள் அமைதியினால் கேட்பவர் உள்ளத்தே சித்திரம் அமைவது போல, காதிலே விழும் பேச்சினாலும் தொனிக் குறிப்பினாலும் ஒலிகளின் அமைதி பாலும் பாத்திரங்களின் இயல்பையும் நிகழ்ச்சி வகைகளை யும் உணர்ந்து, கேட்பவர்கள் நன்றாக ரசிக்கும்படியாக ரேடியோ நாடகங்களை இப்போது நிகழ்த்தி வருகிறார்கள். எனவே வானொலியில் நாடகமும் சிராவிய காவியமாக மாறிவிட்டது. .