பக்கம்:கீதைப்பாட்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கீதைப் பாட்டு இதனை வெளியிட முன்வந்தவர் 'பாரதி புத்தகாலயம்' உரிமையாளர் அன்பர் திரு. வெங்கட் அவர்களுக்கும். மேலாளர் திரு. வ. முனிசாமி அவர்களுக்கும், மகாவித்துவான் குடும்பத்தினர் சார்பாகவும், என் சார்பாகவும் முதலில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். சென்ற ஆண்டு வெளிவந்த "இன்கவித்திரட்டு' நூல் வெளிவர அச்சில் உதவியவரும் இவர்களே. தொடர்ந்து மகாவித்துவானின் நூல்களை வெளியிடவும் இவர்கள் முன்வந்துள் отпГП "Бопт. மகாவித்துவான் எழுதிவைத்திருந்த "கீதைப்பாட்டு'ப் பிரதி பற்றிச் சில வார்த்தை நல்ல பைண்டிங் செய்யப்பட்ட ஒரு நோட்டுப் புத்தகம். அதில் கிரந்த லிபியில் பகவத்கீதை சுலோகங்கள் அச்சிட்ட தாள்களை மேலே ஒட்டி, அதன்கீழே அந்தச் சுலோகத்திற்குரிய தாழிசைப் பாடலை எழுதியுள்ளார். 13ஆம் அத்தியாயம் முதல் சுலோகத்திற்கு மட்டும் மகாவித்துவானின் மொழிபெயர்ப்புத் தாழிசை இல்லை. இதுபற்றி மகாவித்துவான் புதல்வர் அவர்களிடம் உசாவிய போது அவர் தந்த விளக்கம் வருமாறு: “பூரீ சங்கரர், பூரீ இராமாநுஜர் ஆகியோர் எழுதிய பாஷ்யங்களில் 13ஆம் அத்தியாயம் முதல் சுலோகம் 'ப்ரக்ருதிம் என்பது இல்லை! இதம் சரீரம்’ என்று தொடங்கும் சுலோகம் முதல் எண்ணாக உள்ளது. 'ப்ரக்ருதிம்’ என்று தொடங்கும் சுலோகம் இருவர் பேருரைகளிலும் இல்லாமையால் தந்தையார் அதற்குத் தாழிசைப் பாடல் எழுதவில்லை" என்று விளக்கம் தந்துள்ளார். மேலும், சித்பவானந்தா விரிவுரைப் பதிப்பில், பல பதிப்புகளில் இச்சுலோகம் காணப் பெறவில்லை என்னும் குறிப்புக் காணப்படுகிறது. இப்பதிப்பின் அமைப்பைக் குறித்துச் சில வார்த்தை மகாவித்துவான் கைப் பிரதியில் கண்டபடி "கீதைப்பாட்டு' என்றே இந்நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சில பிரதியில் "கீதைத்தாழிசை' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிப்பில் இந்த இரு பெயர்களையும் பயன்படுத்தியுள்ளோம். நூலிற்குரிய பாயிரமாக மகாவித்துவான் கடவுள் வாழ்த்து. அவையடக்கம் முதலானவற்றை அமைத்துள்ளார். நூலுள் 18 அத்தியாயங்களும் தனித்தனியாக அமையுமாறு அச்சில் தரப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/10&oldid=799641" இலிருந்து மீள்விக்கப்பட்டது