பக்கம்:கீதைப்பாட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை 11 மகாவித்துவான் கைப் பிரதியில் கண்டவாறு கிரந்தலிபியில் அச்சிடாமல் வடமொழிச் சுலோகம் தமிழ் எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து மகாவித்துவான் படைத்த தாழிசைப்பாட்டு இடம் பெறுகிறது. பாடலின் இறுதியில் தொடர் எண் தரப்பட்டுள்ளது. நூலில் இடம் பெற்ற தாழிசை 702. தாழிசைப் பாடலின் பின் மகாகவி பாரதியாரின் உரைநடை மொழிபெயர்ப்பு அமைகிறது. இது ஒரு வகையில் பாடலுக்கு உரைபோல உளளது. ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் கீதை இயற்பொருள் விளக்கம் பற்றிய மகாவித்துவானின் பாடல் அமைகிறது. அதனையடுத்துப் பாரதியாரின் பாயிரவுரை இடம் பெறுகிறது. "கீதைப் பொருட்டொகை என்னும் தலைப்பில் காணும் வெண் பாக்கள் நூல் முதலிலும், இறுதியிலும். ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் இடம் பெற்றுள்ளன. இவற்றிற்குரிய தொடர் எண்ணும் தனித்துத் தரப்பட்டுள்ளது. நூல் முழுமைக்கும் கீதைப் பொருட்டொகைப் பாக்கள் மொத்தம் 32 உள்ளன. நூலிறுதியில் கண்ணன் திருவருள் போற்றும் பாடல்கள் ஆறு அமைந்துள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதியும் நூலின் இறுதியில் தரப்பட்டிருக்கிறது. கீதைப்பாட்டு நூலின் தமிழ் எழுத்தில் அமைந்த வடமொழி சுலோகங்களைச் சரிபார்த்து உதவிய என் ஒரு சாலை ஆசிரிய நண்பர் கே. பார்த்தசாரதி அவர்களுக்கு மிக்க நன்றி. பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் நல்ல நண்பர். சிறந்த தமிழறிஞர். ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் பெருநாவலர்' எனப் பாராட்டப் பெறுபவர். வைணவ சம்பிரதாயங்களையும் கோட்பாடுகளையும் நன்கறிந்தவர். கம்பனில் பேரீடுபாடு உடையவர். பட்டி மன்றங்களில் பாங்குடன் வாதிப்பவர். தமிழ் உலகம் நன்கறிந்தவர். இவர்களிடம் அணிந்துரை பெறுவது பொருத்தமாகும் என நானும் பதிப்பகத்தாரும் கருதினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/13&oldid=799674" இலிருந்து மீள்விக்கப்பட்டது