பக்கம்:கீதைப்பாட்டு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கீதைப் பாட்டு நான் நீரில் சுவை, குந்தி மகனே நான் ஞாயிற்றிலும் திங்களிலும் ஒளி எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான் ஆண்மக்களிடத்து நான் ஆண்மை. புண்யோ கந்த: ப்ருதிவ்யாஞ்ச தேஜச்சாஸ்மி விபாவலெள ஜீவனம் ஸர்வபூதேவடி தபச்சாஸ்மி தபஸ்விஷ 9. புண்ணிய மணம் புவியி லாகுவ னெருப்பிற் பொங்கொளியு மாகுவல் பிராணிமுழு துக்கும் உண்ணலுறு சீவனமு மாகுவல் தவத்தை உஞற்று பவர்தம் முளோர்தவம் மெனவுமாவேன். 289 மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும் யான் எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான். பீஜம் மாம் ஸர்வபூதானாம் வித்தி பார்த்த லநாதனம் புத்திர்ப்புத்திமதா-மஸ்மி தேஜஸ்-தேஜஸ்வினா-மஹம் 10. பிராணி முழுதுக்குமொ ரநாதி விரையாகப் பிருதைவழி வந்தவ வெனைத் தெரிய கிற்பாய் பராயவறி வாளரிடையேயறிவு மாவல் பாயபுக ழாளரிடை யானொர்பிர தாபம். 290 எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான். ஒளியுடையோரின் ஒளி நான். பலம் பலவதாமஸ்மி காமதுரகவிவர்ஜிதம் தர்மாவிருத்தோ பூதேவடி காமோsஸ்மி பரதர்ஷப 11. பரதன் வழிவந்து விடை பன்னவ வவாவும் பற்றுமிலை யாம்வலியும் யான் வலியு ளார்பால் தரும நெறியைப் பகைமை கொள்ளுதலி லாமற் - - றங்கு நசை யாவலுள மன்பதைக ளின்கண். 297 வல்லோரிடத்தே விருப்பமும் விழைவந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே. உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/135&oldid=799680" இலிருந்து மீள்விக்கப்பட்டது