பக்கம்:கீதைப்பாட்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கீதைப் பாட்டு இவற்றோடு கூடியுள்ள இறைவன் ஒருவன் என்பது விசிட்டாத்வைதம். இராமாநுசரால் இக்கோட்பாடு ஊக்கத்தோடு பரப்பப்பட்டது. இறைவன் ஒளி போன்றவன் ஏனைய பொருள்கள் இருள் போன்றன. பரம்பொருளும் உயிரும் முற்றிலும் மாறுபட்ட தன்மைகள் கொண்டவை என்பது ‘துவைதம்’. இந்நெறியினை எடுத்து விளக்கியவர் மத்வாச்சாரியார். இம்மூன்று பெருமக்களுமே தங்கள் கொள்கையினை விளக்கக் கீதையினைத் துணையாகக் கொண்டனர். பகவத்கீதை'க்கு இம் மூவருமே உரைவிளக்கம் தந்துள்ளனர். இது பகவத்கீதை'க்குரிய தனிச்சிறப்பு என்று குறிக்கலாம். பிரஸ்தானத்திரயங்களுக்குள் பகவத்கீதைக்குத் தான் மிகப்பல விரிவுரைகள் உள்ளன. பல மொழி பெயர்ப்புகள் உள்ளன. ஆன்மீக வாதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஆர்வமும் எழுச்சியும் ஊட்டுவதாகப் பகவத்கீதை அமைந்தது. அண்ணல் காந்தியடிகள் அதனைத் தம்மை வளர்க்கும் தாய்ப்பாலாகக் கருதினார். நாள்தோறும் கீதையின் செய்யுட்களை மனப்பாடஞ் செய்தார். திலகர் பெருமான் விளக்கம் எழுதினார். வைணவப் பெரியார்களுள் ஒருவராகத் திகழ்ந்த பராசரபட்டர் முதல் தேசிய கவிஞரான பாரதியார் வரை பலர் பகவத்கீதையைத் தமிழில் பாட்டு வடிவிலோ உரைநடை வடிவிலோ மொழிபெயர்த்துத் _ தந்துள்ளனர். உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறப்பு ‘விவிலியம்’, ‘திருக்குறள். 'பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களுக்கே உண்டு. இராமகாதையைத் தமிழில் தந்த கம்பநாடரும் பகவத் கீதையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்துள்ளார். 'பரித்ராணாய ஸாதூனாம் என்னும் கீதைச் செய்யுளை அனுமன் கூற்றாக இனிய செய்யுளாகப் படைத்துள்ளார். “நல்லாரைக் காப்பதற்கும். கெட்டவரை அழிப்பதற்கும். அறத்தை நிலைநாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் பிறக்கிறேன்” (48) என்பது அச்செய்யுளின் கருத்து. இதனைக் கம்பர். 'அறம்தலை நிறுத்தி, வேதம் அருள்சுரந் தறைந்த நீதித் திறம்தெரிந் துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/16&oldid=799707" இலிருந்து மீள்விக்கப்பட்டது