பக்கம்:கீதைப்பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை 17 அர்த்தார்த்தி. ஞானி’ ஆகிய சொற்களை முறையே "துன்பினன். தன்னைத் தெரிபவன். செல்வம் சூழ்பவன், என்னைத் இறைவனை தெளிபவன்' சுலோகம் 296 என்றும் பொருள் விளங்கத் தமிழாக்கம் செய்துள்ளார். 'ஸர்வதர்மான்' என்னும் சுலோகம் சிறப்பானது. வைணவர் கள் மூன்று மந்திரங்களுள் ஒன்றாக அதனைக் குறிப்பர். அதனை, 'அறம்.அ னைத்தையும் அறவிடுத்தெனை ஒருவ னைச்சரண் அடைக யான் மறம்.அ னைத்தினும் உனைவிடுத்தல்செய் குவன் இடர்ப் படுவது செயாய்” (மோகூடி சந்யாச யோகம்:66) என்று மொழி பெயர்த்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது. பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை பதிப்புத்துறையில் வல்லவர். தமிழ்நலமே தம்நலம் என்று வாழ்பவர். அவர்தம் தள்ளாத வயதில் எப்படியேனும் பெரும்புலவர் ரா. இராகவையங்காரின் கீதை மொழிபெயர்ப்பு வெளிவருதல் வேண்டும் என்று அரும்பாடு பட்டு இதனை வெளிக் கொண்டு வந்துள்ளார். பகவத்கீதை இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் வழிகாட்டும் உயரிய நூல். இம்மொழி பெயர்ப்போ பெரும்புலவரால் நல்லதமிழில் ஆக்கியது. இதனைப் பதிப்பிப்பவரோ முதுபெரும் பேராசிரியர். இத்தகைய தகுதிமிக்க இந்நூல் இறை ஆர்வலர்களாலும், தமிழன்பர்களாலும் பெரிதும் போற்றப்படும் என்பது எளியேன் துணிபு. சென்னை - 101 அன்பன். O9.06 97 தெ. ஞானசுந்தரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/19&oldid=799741" இலிருந்து மீள்விக்கப்பட்டது