பக்கம்:கீதைப்பாட்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் அறிமுகம் + 19 இராமநாதபுரம் சேதுபதிகள் தமிழை நன்கு வளர்த்த வள்ளல்கள். நவராத்திரித் திருவிழாவில் பல புலவர்களையும், அருங்கலை விநோதர்களையும் அழைத்துப் பரிசுகள் வழங்குவதுண்டு. பாஸ்கர சேதுபதி தம் அவையில் அமர்ந்திருந்த இராகவய்யங்காரின் புலமையில் ஈடுபட்டு அவரைத் தம் சமஸ்தான வித்துவானாக இருக்கப் பணித்தார். இது போலவே இசைத் துறையில் தேர்ந்த பூச்சி பூரீநிவாச ஐயங்கார் சமஸ்தான வித்வானாக உபசரிக்கப் பெற்றார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்ல விரும்பிய பொழுது பலநாட்கள் இராமநாதபுரத்தில் தங்கி, சேதுமன்னரின் பொருளுதவியால் அமெரிக்கா சென்றார். அவர் அவைக்களப் புலவர்களோடு இந்து சமயம் பற்றிய சர்ச்சைகள் பல செய்து இன்புற்றது உண்டு. சேதுபதியின் உறவினரான பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை 1901 இல் நிறுவி, இராகவய்யங்கரைச் "செந்தமிழ்” என்னும் ஆராய்ச்சி இதழுக்கு ஆசிரியராக்கினார். “எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறளைக் குறிக்கோளாகக் கொண்ட “செந்தமிழ்” என்னும் தமிழ் ஆராய்ச்சி மாத இதழைத் தொடங்கியவர் என் அருமைப்பாட்டனார் மகா வித்துவான். பாஷா கவிசேகரர் ரா. இராகவையங்கார் அவர்கள். l இதன் மூலம் தமிழன்னை பெற்ற ஆராய்ச்சி முத்துக்கள் எண்ணிலடங்கா. விஞ்ஞான, பகுத்தறிவுக்கு ஏற்பத் தமிழாராய்ச்சி செய்தற்குத் தம் கட்டுரைகளின் மூலம் இலக்கணம் வகுத்தார். -சில ஆண்டுகளுக்குப்பின் தம் தாய் மாமன் மைந்தரும். தமிழ்ப் பெரும் புலவருமான மு. இராகவையங்காரிடம் ஆசிரியப் பொறுப்பை அளித்தார். மீண்டும் சேது சமஸ்தான அவைக்களப் புலவரானார். அண்ணாமலை நகரில் 1935 ஆம் ஆண்டு தமிழராய்ச்சிப் பகுதி திறக்கப்பட்டு, அப்பகுதித் தலைவராக நியமிக்கப் பெற்றார். இதுவரை சொந்த முயற்சியால் நூல்கள் வெளியிட்டும், சொற்பொழிவுகள் புரிந்தும் - ஒக்குத் தொண்டுபுரிந்தவர்க்கு இப்பகவி மலம் மிக விரிவாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/21&oldid=799763" இலிருந்து மீள்விக்கப்பட்டது