பக்கம்:கீதைப்பாட்டு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (பதினேழாம் அத்தியாயம்) சிரத்தாத்ரய விபாக யோகம் (a) இயற்பொருள் ars) பதினே ழெனு மியல் நூல் விதிபகரா தனமுழுதும் பொதியா சுரமெனவும் விதிபுகல் கிற்பனவும் பல் விதமாவன குணனா லெனவுஞ் சாசன வினையும் வதிமூன் றடையாளம் முளவெனவும் வகைகூறும். அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவித் தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தையுடையோர் யசுடிர்களையும் ராகடிதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் யூத பிரேத பிசாசங்களை வணங்குவார். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பல கிட்டா தென்பது மாத்திரமன்றி. அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்னும் உணவும். செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப்பட்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/239&oldid=799797" இலிருந்து மீள்விக்கப்பட்டது