பக்கம்:கீதைப்பாட்டு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கீதைப் பாட்டு விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சுபோன்றதாய் முடியும் இன்பம் ராஜச மெனப்படும். யதக்ரே-சானுபந்த்தே ச லகம் மோஹன-மாத்மன: நித்ராலஸ்ய-ப்ரமாதோத்தம் தத்-தாமஸ்-முதாஹ்ருதம் 39. எதுசுக முதலினும் வளர்தரு பொழுதத் தினுமயலினை யுதவியது தனக்கே அதிமடி துயிலொடு மறவி யிவற்றோ டளைகுவ ததுதமகளதென லாகும். 663 தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும் ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷ வா புன: லத்வம் ப்ரக்ருதிஜைர்-முக்தம் ய தேபி: ஸ்யாத் த்ரிபிர்-குணை: 40. மண்ணிலே யலது விண்ணிலே யமரர் வகையிலே யெனினும் பகடியின் கண்வரும் முயிரி னிந்த முக்குணம கன்ற தாகுமெது வஃதிலை. б64 இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை. ப்ராஹ்மன-கூடித்ரிய-விசாம் சூத்ராணாஞ் ச பரந்தப கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ-ப்ரபவைர்-குணை: 41. அந்தண்ாளர் சத்திரியர் வைசியர் அம்ம சூத்திரர்க் கவரியற்கையின் வந்தபல் குணத்தால் வினைத்திறன் வகைமை புெற்றதா லிகலை யட்டவ. 655 பரந்தபா பிராம்மணர் கூடித்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுபபுறறனவாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/261&oldid=799848" இலிருந்து மீள்விக்கப்பட்டது