பக்கம்:கீதைப்பாட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 o - கீதைப் பாட்டு ச்வகரான் ல-ஹ்ருதச்சைவ லேனயோ-ருபயோ-ரபி தான் ஸ்மீகூடிய ஸ் கெளந்தேய: லர்வான் பந்து-னவஸ்த்திதான் க்ருபயா பரயாssவிஷ்டோ விஷிதன்-னித-மப் ரவித் 27. குந்தி சேயவ னங்கண் மேயவக் 28 கூடு சுற்றமெல் லாமு நன்குகண் டந்தி லாரருள் வந்து சூழநின் றதிவ ருத்தமொ டிதையு ரைத்தனன். 27-28 அங்ங்னமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப் பார்த்தன் - மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான். அர்ஜுன உவாச : த்ரு ஷ்ட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்லம்ை லமுபஸ்திதடம் வnதந்தி மம காத்ராணி முகஞ்ச பரிசுஷ்யதி வேபதுச்சசரீரே மே ரோமஹர்ஷச்ச ஜாயதே 2829. போர்பொருவ திற்பெரிது மார்வமுள ராகிப் புக்கிவ னெருங்கியுள விக்கிளைஞ ரைக்கண் டாருட லொடுங்கிமுக மாங்குலரு வேனெற் காடுவது தேகமயிர் குச்செறிவ தாகும். 28–29 அர்ஜூனன் சொல்லுகிறான். “கண்ணா, போர் செய்ய வேண்டி இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார் களைக் கண்டு. என் அவயவங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. காண்டீவம் ஸ்ரம்லதே ஹஸ்தாத் த்வக்சைவ பரிதஹ்யதே ந ச சக்னோம்-யவஸ்த்தாதும் ப்ரமதீவ ச மே மன: நா 30. காண்டிவமென் கைப்பிடி கழன்றுவிழு மம்ம காந்தியெரி கிற்பதுட லேந்துதசை யுந்தான் ஈண்டென்மன முஞ்சுழலு கின்றதென வுள்ளேன் இங்கனிலை நிற்கவு. மெனுக்குவலி யின்றே. 30 காண்டிவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. (காண்டிலம் என்பது அர்ஜூனனுடைய வில்லின் பெயர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/49&oldid=799926" இலிருந்து மீள்விக்கப்பட்டது