பக்கம்:கீதைப்பாட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(பதிப்புரை) -- பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை 'வில்பெரு விழவும், கஞ்சனும், மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னை, புரமெரி செய்த சிவன் உறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்தன் தேர்முன் நின்றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானை, திருவல்லிக் கேணிக் கண்டேனே! இவ்வாறு அர்ச்சுனனாகிய பார்த்தனது தேரின்முன் குதிரையோட்டும் கோலைக் கையில் கொண்டு நின்ற கண்ணனின் திருவுருவைக் கண்டு களிக்கிறார் திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி: 2-3). திருவல்லிக்கேணியில் கோயில் கொண்டருளும் எம்பெருமான் திருநாமம் பார்த்தசாரதி. பார்த்தசாரதி திருவாய் மலர்ந்தருளியது கீதை கீதை என்பது உத்தம தர்மங்களைக் கூறும் தெய்வப் பாடல் ஆகும். அதாவது தெய்வமே முன்னின்று அருளிய ஞானோபதேசம் ஆகும். பகவான் கண்ணன் அருச்சுனனுக்கு அருளியது பகவத்கீதை என்று போற்றப் பெறுகிறது. ஈசுர கீதை, ரிபு கீதை முதலிய நூல்களும் தமிழில் உள்ளன. கண்ணன் பாண்டவர் ஐவருக்கும் துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவர்க்கும் நிகழ்ந்த பெரும் போரில் ஈடுபட்டு ஐவரையும் வாழ்வித்தான் என்பது உலகம் அறிந்தது. இப்போரில் அருச்சுனனாகிய பார்த்தனுக்குத் தேரோட்டினான் கண்ணன். பார்த்தசாரதி என்னும் திருப்பெயரையும் பெற்றான். போர்த் தொடக்கத்தில் உற்றார் உறவினருக்கு எதிராகப் போரிடுவது முறையா என்னும் எண்ணத்தில் உள்ளம் கலங்கிச் சோர்வுற்று சோக வயத்தனானான் பார்த்தன். அவனுக்குக் கடமையைச் செய்! - 'பயன் எதிர்பாராதே' என்று கீதையாகிய ஞானாமுதை வழங்கினான் கண்ணன்." இக்கீதை எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/5&oldid=799927" இலிருந்து மீள்விக்கப்பட்டது