பக்கம்:கீதைப்பாட்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கீதைப் பாட்டு பெயர்த்துள்ளார். மகாகவி காளிதாசர் இயற்றிய வடமொழி அபிஜ்ஞான சாகுந்தலம்’ என்னும் நாடக நூலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பகவத் கீதை சுலோகங்கள் முழுமையும் அழகிய சந்தமுடைய தாழிசைப் பாவில் ஆக்கியளித்துள்ளார். இதற்குக் கீதைப் பாட்டு, கீதைத் தாழிசை என்னும் பெயர்களைச் சூட்டியுள்ளார். மகாவித்வான் முதல் கையெழுத்துப் பிரதியில் கீதைப்பாட்டு' என்றே தலைப்பிட்டுள்ளார். நூல் தமிழ்த் தாழிசைப் பாவால் ஆகியது. பின்னால் எழுதப்பட்ட சில பிரதிகளில் கீதைத் தாழிசை என்னும் தலைப்பு காணப்படுகிறது. எனவே, இந்த இரு பெயரும் நூலில் குறிப்பிடலாயிற்று. மொழிபெயர்ப்பு நூல்களைப் போலவே தமிழிலும், 'பாரிகாதை", 'திருவேங்கடமாயோன் மாலை'. 'திருவடி மாலை', 'திருப்புல்லாணியமக வந்தாதி'. 'புவியெழுபது', "தொழிற்சிறப்பு முதலிய பல கவிதை நூல்களை யாத்துள்ளார். தம்மை ஆதரித்த வள்ளல் சேதுபதி மீது பாடிய, 'இராஜராஜ சேதுபதி ஒரு துறைக் கோவை மிகச் சிறந்த இயற்றமிழ் நூலாகும். உரைநடையில். ‘வஞ்சிமாநகர்', 'சேதுநாடும் தமிழும் முதலிய பல ஆராய்ச்சி நூல்களையும் யாத்துள்ளார். இக் "கீதைப்பாட்டு’ உயர்நீதிமன்ற நீதிபதி பூl V.S. பூரீ நிவாலையங்கார் நன்முயற்சியில் மயிலாப்பூரில் கூட்டப் பெற்ற பேரவையில். 1933 ஆம் ஆண்டு அரங்கேற்றப் பெற்றது. இரு மொழி வல்லார் பலராலும் பாராட்டப் பெற்றது. தமது சொற்பொழிவுகளி லும் இக் கீதைப் பாடல்’களை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். இதனால், இந்நூல் அச்சாகாவிடினும் தமிழறிஞர் பலரும் அறிந்த ஒன்றாகும். 'சந்தமுறு ரகுவமிசம் சாகுந்தலம் கீதை சாரமெல்லாம் தந்திடுவான்’ f என்று கரந்தைத் தமிழ்ச் சங்க வரவேற்புரையில் கூறப்பட்டுள்ளது. 'கீதை தமிழில் கிளந்தான் வேள்பாரி காதை நலங்கனியக் கட்டு ரைத்தான்' என்று பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையும், 'கீதை மொழிபெயர்த்தான் கேடில் புகழ்காளி தாதனார் சாகுந்தலத்தைத் தமிழ் செய்தான்’ என்று பேராசிரியர் மு. இராகவையங்காரும் புகழ்ந்துள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/8&oldid=799960" இலிருந்து மீள்விக்கப்பட்டது