பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பேருருவம் 97 பகைவன்-நண்பன் மானம்-அவமானம் குளிர்-வெப்பம் இன்பம்-துன்பம் புகழ்-இகழ் இவற்றை யெல்லாம் சமமாகக் கருதவேண்டும். மகனையும் மனைவியையும் வீட்டையும் தன் உடைமை என்று கருதாதவனும் பற்றில்லாதவனுமே இந்த சமநோக்கு உடையவன் ஆக முடியும் என் கிறான். ஆகாசம் எங்கும் இருந்தாலும், தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல் உடம்பில் ஆத்மா எங்கும் இருந் தாலும் பற்று உறுவதில்லை. - கீதை 13 : 33