பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கீதை காட்டும் பாதை நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். -கீதை 4 : 8 யாவர் என்னை எங்ங்னம் வேண்டுகிறார்களோ, அவர் களை நான் அங்ங்னமே அறிகிறேன். - கீதை 4 : 11 எந்த எந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ. அவனவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற் கொள்ளுகிறேன். -கீதை 4 : 91 கிருஷ்ணன் தன் கடவுள் தன்மையை அர்ச்சுன னுக்கு விளக்க முயன்ற சுலோகங்களை மேலே காணுகிறோம். கிருஷ்ணனுடைய கருத்துப்படி ஆத்மா என்பது அழிவதில்லை, உடல் தான் அழிகிறது. ஆத்மா வுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. அர்ச்சுனன் போன்ற மக்கள் சாதாரண ஆத்மாக்கள். கண்ணன் பரமாத்மா. ஆத்மாக் களுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒரே வேற்றுமை ஆத்மாக்களுக்குத் தம் பிறப்புகள் பற்றி அறியும் ர்ல்ை கிடையாது. பரமாத்மாவாகிய கிருஷ்ண னுமகு அந்த ஆற்றல் உண்டு. தன்னுடைய பழம் பிறப்புக்களையும் இனிவரும் பிறப்புக்களையும் அவன் அறிவான். மேலும், ஆத் மாக்கள் தம் இச்சைப்படி பிறப்பதில்லை.