பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கீதை காட்டும் பாதை அவரை - மனம்திருந்திய பிறகு - மீண்டும் தீய வழி களில் செல்லாத வண்ணம் புத்தசங்கம் நெறிப் படுத்தியது. அர்சசுனன் போருக்கு முன்னாலேயே மனந் திருந்தினான். ஆனால், அவன் திருந்திய வாழ்வில் தொடராத வண்ணம் போர் வெறிப் பாதையிலேயே மீண்டும் நடக்கும் வண்ணம் செய்யப் பயன்பட்டது கீதை. கண்ணன் காட்டிய வழி போர் வழி. அதற்கு அவன் கையாண்ட கருவி தான் பகவத் கீதை. கண்ணன் வழங்கிய கருத்துரைகள் அடுத்த அத்தியாயங்களில் வரிசையாக வருகின்றன. சீனா தேசத்து ஞானி ஒருவன் சொன்னான். நீர் தெளிவாக உள்ள குட்டையை ஒரு கலக்குக் கலக்கிவிட்டால், நேரம் ஆக ஆக அது தெளிந்து விடும். தெளிவு ஏற்பட ஒரு குழப்பம் தேவை என்றான். தெளிவாக இருப்பதை ஏன் வெட்டியாகக் கலக்க வேண்டும் என்ற கேள்வியை அந்த ஞானி சிந்திக்க வில்லை. இங்கே தெளிவாக உள்ள அர்ச்சுனனைக் கீதை சொல்லிக் கண்ணன் குழப்புகிறான். மறுபடி யும் அர்ச்சுனன் தெளிந்தானா என்றால் தெளியவே இல்லை.