பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பயங்கர ஏற்பாடு 69 வேண்டும். எல்லாம் வல்லவன் என்பதற்கு அது தான் இலக்கணம். ஒரு சாதனையைச் செய்ய அவன் பிறந்து ஆக வேண்டியதில்லை. மாயையால் பிறப்பெடுத்துக் கொள்வதாகக் கூறுகிறான். அதே மாயையில் கட்டுண்டு, வேண்டி யவர் வேண்டாதவர் என்று தரம் பிரித்து, ஒருவருக்கு நன்மையும் மற்றொருவருக்குத் தீமையும் செய்பவன், சாதாரண மனிதனாகத் தான் இருக்க முடியுமே தவிர - வல்லமையுள்ள பரம் பொருளாக இருக்க முடியாது. நடுவு நிலையில் மனத்தை வைத்திருக்க வேண்டும் என்று கீதோபதேசம் செய்கிறான். தானே நடுவு நிலையில் நிற்காததனால், உபதேசிக்கும் தகுதியை இழந்தவனாகிறான். இதன் மூலம் பரம் பொருள் என்ற நிலைக்கும் அருகதையற்றவனா கிறான். தர்மங்கள் அழியும் போதெல்லாம் பிறப்பெடுத்து அதர்மத்தை யொழித்து தர்மத்தை நிலைநாட்டு வதாகக் கூறுகிறவன், தானும் அதர்ம வழியிலேயே சென்று, பழிக்குப் பழிவாங்குதல், துன்பப் படுத்தி உயிர் பறித்தல், பிறருக்கு வேதனை தருதல் போன்ற தீய செயல்களைச் செய்பவனாகப் பிறப் பெடுத்தல் பரம் பொருள் இலக்கணத்துக்கு மாறு பட்டதாகிறது.