பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு குழப்பங்கள் դղ ஒரு மனிதன் சமைக்கிறான். இது சமைத்தல் என்னும் கர்மம். சமைத்துச் சமைத்து அவன் சமையல் ஞானம் பெறு கிறான். இது கர்மத்தில் அகரிமம். கர்மம்-தொழில். அகரிமம்-ஞானம். சமையல் ஞானம் வந்தால் மேலும் திறமையுடன் சமைக் கிறான். இது அகர்மத்தில் கரிமம். தொழில் பழகப் பழக ஞானம் உண்டாகிறது. ஞானத் துடன் பிறகு தொழில் செய்யப்படுகிறது. கர்மத்தில் அகர்மம் உண்டாகிறது. அகர்மம் கரிமத்தைச் செய்கிறது. இது இராமாநுஜ பாஷ்யம் ஒரு செயலையே இரண்டு நிலையில் வைத்துப் பார்க்கும் விசித்திர வாதம் இது. x X X தான் கர்த்தா என்ற எண்ணத்தை அகற்றி தான் செய் யும் கர்மங்கள் எல்லாம் பகவானுடையவை என்று எண்ணு பவன் கர்மத்தில் அகர்மத்தைக் காண்கிறான். சொப்பனத்தில் நடைபெறும் கர்மங்கள் பகவானுடை யவை. அப்போது மனிதன் கர்மம் செய்வதில்லை. எனவே அது அகர்மத்தில் கர்மம் ஆகிறது. இதை அறிந்து கொள் பவன் புத்திமான். - இது மத்வ பாஷ்யம் புத்திமான் என்பதற்கு விசித்திரமான விளக்கம் இது. - X 兴 X