பக்கம்:குக்கூ.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசேந்திரன் கவிதைகள் மீராவின் மரபுக் கவிதைத் தொகுப்பு. மீரா இன்னும் நிறைய கவிதைகள் எழுதி இருக்க வேண்டும் என்பர். அது சாத்தியப்படாமல் போயிற்று. காரணம் அவர் நூறு வேலைகளை விரும்பிச் சுமந்ததே. என்றாலும் ஒன்று கவனத்திற்குரியது. மேலே கவிதைகள் எழுதவில்லையே தவிர மீரா கவிதை இயல குறித்து எழுதியிருப்பது நிறைய.

பல்வேறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் இலக்கியத் திறனாய்வு நூல்களுக்கு மீரா அளித்துள்ள முன்னுரைகள் அவரது கவிதைக் கோட்பாட்டை விளக்கும். ஒப்பீட்டுக் கவிதையியல் குறித்து விரிவாகப் பேசும். மீராவின் வாஇந்தப் பக்கம் தொடர் இளம் படைப்பாளிகள் பலரை வா, தம்பி வா என்றழைத்து இலக்கியப் பாடம் நடத்திற்று. அவரது 'எதிர்காலத் தமிழ்க் கவிதைக் இருபத்தோராம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்கு ஒரு கட்டியம்.

கவிதை மட்டுமே எழுதிக் குவிப்பவர்தான் கவிஞரா? கவிதைபோல உரைநடையைக் கையாள்பவர் கவிஞர் அல்லவா? அல்லது கவிதையியல் குறித்து கவிதை போலப் பேசுபவர் கவிஞர் ஆகமாட்டாரா? கவிதை வேறு, கவிதையியல் வேறு என்று வாதிப்பர் சிலர். சமாதானம் என்னவெனில் மீராவின் கவிதையியல் எழுத்துக்களையும் சேர்த்து கவிதைத் துறைக்கு அவர் அளித்த பங்கு நிறைவானதாய்த் தோன்றுகிறது என்பதே. பல ஆயிரம் செய்யுளில் காவியம் இயற்றுவோரும் ஒரு சில பத்தி உரைநடை எழுத இயலாதவர்களாயிருக்கின்றனர் என்றுதமிழ் இலக்கியச்சூழலைப் பார்த்த அந்த நாள் பாதிரிமார்கள் எழுதி வைத்தனர். இன்றும் இது உண்மையே.

பாரதி, பாரதிதாசன் இதற்கு விலக்கு. கவிதையும் உரையும் அவர்களுக்கு இருமுனைக் கத்தி. அவர்தம் கைலாவகத்தில் இதுவோ அதுவோ ஆகும் அது. மீராவும் அவ்வாறு உரைவல்ல கவி.

புதிய கவிஞர்களை அறிமுகம் செய்தது போலவே புதிய கதைஞர்களையும் அறிமுகம் செய்வித்தார் மீரா. பலரது

82
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/83&oldid=1233633" இருந்து மீள்விக்கப்பட்டது