பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும் தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர் பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத் துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே, "பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர் அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.

காலையுணவு

அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை; "வந்தேன் என்று மணாளன் வந்தான்; "வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள். பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய். தழைத்த வாழைத் தளிரிலை தன்னில் பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்; காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர்.

தய்தான் வாத்திச்சி

நேரம் போவது நினையா திருக்கையில் பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்; அவள்கண்டு, காலை "ஆறுமணி" என உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான். உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின் அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி. பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள். அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்; தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே!

பள்ளிக்குப் பிள்ளைகள்

எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப் புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள் சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை கையில் தந்து, கையடு கூட்டித்