பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒருநாள் நிகழ்ச்சி அவனோர் மருத்துவச்சி நாடியில் காய்ச்சல் என்றே நன்மருந் துள்ளூக் கீந்தாள்; ஓடிநற் பாலை மொண்டு. மறுவுலைக் களூசி ஊற்றி, வாடிய கிழவர்க் கீந்தாள்; மாமிக்கோ தலைநோக் காடாம், ஓடிடச் செய்தாள் மங்கை ஒரேபற்றில் நொடிநே ரத்தில் அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை குழந்தைகள் பள்ளி விட்டு வந்தார்கள்; குருவிக் கூட்டம் இழந்ததல் லுரிமை தன்னை எய்தியே மகிழ்வ தைப்போல்; வழிந்தோடும் புதுவெள் எத்தை வரவேற்கும் உழவ ரைப்போல். எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்தினாள் இருகை யாலும்! உடை மாற்றினாள் பள்ளியில் அறிஞர் சொன்ன பாடத்தின் வரிசை கேட்டு வெள்ளிய உடை கழற்றி, வேறுடை அணியச் செய்தே, உள்வீட்டில் பாட்டன் பாட்டி உள்ளதை உணர்த்தி. அந்தக் கள்ளினில் பிள்ளை வண்டு களித்திடும் வண்னாம் செய்தாள். தலைவி சொன்ன புதுச்செய்தி அன்றைக்கு மணம்பு ரிந்த அழகியோள் வீடு வந்தாள்; இன்றைக்கு மணம் புரிந்தாள் எனும்படி நெஞ்சில் அண்பு குன்றாத விழியால்ன்ன் குரிவிழி தன்னைக் கண்டாள்; 11