பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50
சமைப்பது கெண்க ளுக்குத்
தவிர்கொணாக் கடமை என்றும்.
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தாய்மார்க்கே தக்க தென்றும்,
தமிழ்த்திரு நாடு தன்னில்
இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப்போதில் நீக்க வேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும்.
சமையலில் புதுமை
சமையலில் புதுமை வேண்டும்;
சமையல்நூல் வளர்ச்சி வேண்டும்;
சமையற்குக் "கல்வி இல்லம்"
அமைந்திட வேண்டும் யாண்டும்;
அமைவிலாக் குடும்பத் துள்ளும்
அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில்
சமையலில் திறமை வேண்டும்
சாக்காடும் தலைகாட் டாதே!
கெட்டுடல் வருந்து வோர்கள்
சமைக்கும்நற் கேள்வி பெற்றால்
கட்டுடல் பெற்று வாழ்வார்!
கல்விக்கும். ஒழுக்கத் திற்கும்
பட்டுள பாட்டி னின்று
விடுதலை படுவ தற்கும்
கட்டாயம் சமைக்கும் ஆற்றல்
காணுதல் வேண்டும் நாமே.
வறுமையும் தெரிவ துண்டோ
சமையலில் வல்லார் இல்லில்?
நறுநெய்யும் பாலும் தேனும்
நனியுள்ள இல்லத் துள்ளும்
கறிசமைத் திடக்கல் லாதார்
வறியராய்க் கலங்கு வார்கள்!
குறுகிய செலவில் இன்பம்
குவிப்பார்கள் சமையல் வல்லார்!
வீறாப்பு வாழ்வு தன்னை
மேற்கொண்டார் என்றால் அன்னார்
குடும்ப விளக்கு