பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
நூறுமுறை அவள் பார்த்தாள் அவளை! ஆளன்
நறுமுறை நோக்கினான். இனிது பெற்ற
பேறுதனை இழப்பாஸ்போல் குறட்டி ளினின்று
பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்கு முன்னர்.
ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!
அவள்வண்டிப் படிமீதித்தாள். திரும்பிப் பார்த்தாள்!
ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருத்தி னர்கள்:
இனிதாக வாழ்த்துரைகள் மாற்றிக் கொண்டார்.
வண்டிநகர்ந் தது:மாடு விரைத்த தங்கே!
மங்கையவள் தலைசாய்த்து வேடப் பன்மேல்
கெண்டைவிழி பைச்செலுத்தி மறைத்தாள்! நெஞ்வசக்
கிளிபறித்துப் போனதனால் மரம்போல் அங்கே
தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித்
தனிப்பார்போல் தனித்திருந்தாள்; அவன்தாய் ஆணை
ஒண்டொடியாள் உட்சென்றாள். நகைமுத் தாளின்
ஓவியத்தில் தன்மகனின் உருவைக் கண்டாள்.