பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1939 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு வெளியிடல், பிரொந்தையார் நாடகம் தொடர்தல், 1.11.50 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல், - 1961- சென்னைக்குக் குடிபெயர்தல். பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கத் திட்டமிடல், செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். 1962- சென்னையில் மீண்டும் 'குயில்' கிழமை ஏடு (15.4.62). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம், கண்ண புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா வெளியிடல். 1962- மூதறிஞர் இராசாசி, தமிழ் எழுத்தாளர் சங்கச் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கள். 1963- பன்மணித்திரள் நூல் வெளியீடு 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. 1964- பொது மருத்துவமனையில் ஏப்பிரல் 21இல் இயற்கை எய்துதல். மறுநாள் புதுவை கடற்கரையில் உடல் அடக்கம், வாழ்ந்த காலம் 72 ஆண்டு, 11 மாதம், 28 நாள். 1965- ஏப்பிரல் 21. புதுவை கடற்கரை பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் கட்டப்பெற்றது. 1968 - சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, பாவேந்தரின் திருஉருவச்சிலை. மெரினா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது. 1969 - பிசிராந்தையார் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தல். 1970 –' மார்ச்சு, கவிஞரின் 'பி்ரொத்தையார்' நாடக நூலுக்கு சாகித்திய அகாதமி ரூ.5000 பரிசு வழங்கியது. 1971- ஏப்பிரல் 39இல் பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப்பெற்றது. ஆண்டு தோறும் அரசு விழா எடுக்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு 95-ஆம் எண் இல்லம் அரசுடைமை யாயிற்று. அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு நூலகம் - நினைவகம் அருங்காட்சியகமாக கவிஞரின் ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது. 1972 - ஏப்பிரல் 29. பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.