பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

குடும்ப விளக்கு,


“மணமகள்‌ நகைமுத்து வாழ்க வாழ்கவே! மணமகன்‌ வேடப்பன்‌ வாழ்க வாழ்கவே!” என்றார்‌ அனைவரும்‌ எழில்மலர்‌ வீசியே! தன்மலர்‌ மாலை யொண்மகட்‌ இடவும்‌: பொன்மகள்‌ மாலையை அன்னவற்‌ இடவும்‌ ஆன இருமணம்‌ அடைந்த இருவரும்‌,

வானம்‌ இலிர்க்கும்‌ வண்டமி ழிசைககடை மன்றினர்‌ யார்க்கும்‌, அன்னைதந்‌ தையர்க்கும்‌ நன்றி கூறி, வணக்கம்‌ நடத்த.

நிற்றலும்‌, "நீவிர்‌ நீடு வாழிய!

'இற்றைநாள்‌ போல எற்றைக்கும்‌ மடழ்க! 'மேலும்‌உம்‌ வாழ்வே ஆலெனச செழித்து ௮றுருபோல்‌ வேர்பெற। குறைவில்‌ லாத மக்கட்‌ பேறு மல்ருக" என்று,

மிக்கு யர்ந்தார்‌ மேலும்வாழ்த்‌ இனரே! அமைந்தார்‌ எவர்க்கும்‌ தமிழின்‌ 8ர்போல்‌ கமழும்றீர்‌ தெளித்துக்‌ கமழ்தார்‌ தட்டி வெற்றிலை பாக்கு விரும்பி அளித்தார்‌. மற்றும்‌ ஓர்முறை வாழிய நன்மணம்‌:

என்று, வந்தவர்‌ எழுந்த அளவில்‌,

எழில்மண்‌ மக்களும்‌, ஈன்றார்‌ தாமும்‌.

“நன்றி ஐயா। நன்றி அம்மா।

'இலைபோட்டுட்‌ பரிமாறி எதிர்பார்த்‌ இருக்கும்‌ எம்‌௮வா முடிக்க இனிதே வருக!

உண்ண வருக உண்ண வருக"

என்று பன்முறை இருகை எந்இனர்‌.

நன்மண விருந்துக்கு. நண்ணினார்‌ அனைவரும்‌. மணமகள்‌ மணமகன்‌ மடழ்வொடு குந்‌இனர்‌; துணையொடு துணைவர்‌ இணைந்திணைந்து குந்தினர்‌; வரிசையாய்ப்‌ பல்லோர்‌ வட்டித்‌ இருந்தனர்‌. விருந்து முடித்து, விரித்த பாயில்‌ அமர்ந்தார்க்குச்‌ சந்தனம்‌ அளித்துக்‌ கமழ்புனல்‌ அமையத்‌ தெளித்தே அடைகாய்‌ அளிக்க மணமக்‌ கள்தமை வாழ்த்தினர்‌ செல்கையில்‌ எழில்மண மக்கள்‌ ஈன்றோர்‌.

வழிய னுப்பினர்‌ வணக்கம்‌ கூறியே,