பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு,

 

குறுகிய இடத்தி னின்று.
குந்தாணி நீக அந்தத்‌.
துறையிலே கண்டாள்‌ பிள்ளைத்‌.
தொட்டிலை எடுக்க லானாள்‌..
“நகைமுத்தாள்‌" என்று கூறி,
நடுமூன்று விரலைக்‌ காட்டித்‌:

  • துகள்போகத்‌ துடைக்க வேண்டும்‌.

தொட்டிலை” என்றாள்‌ தங்கம்‌.
மழைந்தனன்‌। எனினும்‌, “பிள்ளை
மருமகள்‌ பெறவோ இன்னும்‌
தொகை ஏழு இங்கள்‌ வேண்டும்‌.
இதற்குள்‌ஏன்‌ தொட்டில்‌?” என்றான்‌.
“பேரவா வளர்க்கும்‌ என்பார்‌.
பேதமை! அதுபோல்‌ நீயும்‌
பேரனைக்‌ காண லான.
பேரவாக்‌ கொண்ட தாலே,
€ருற மூன்று இங்கட்‌
கருக்கொண்ட செய்த கேட்டுக்‌
காரிருள்‌ தன்னில்‌ இன்றே.
தொட்டிலைக்‌ கண்டெ டுத்தாய்‌”...
எனமண வழகன்‌ சொன்னான்‌.
ஏந்திழை சரித்து நாணி.
இனிதான தொட்டி லைப்போய்‌
ஒருபுறம்‌ எடுத்துச்‌ சார்த்இித்‌.
'தனதன்பு மணாள ஸுக்குச்‌.
சாப்பாடு போடச்‌ செனறாள்‌;.
தனிமண வழகன்‌ வந்து.
தாழ்வாரத்‌ தே மர்ந்தான்‌.,
உணவையும்‌ மறந்து விட்டான்‌:
தெருப்பக்கத தறைமின்‌ உள்ளே.
பணப்பெட்டி தனிலே வெள்ளிப்‌
பாலடை தேடு தற்குத்‌.
துணிந்தனன்‌; அறையில்‌ சென்றான்‌.
பெட்டியைத்‌ தூக்கி வந்து
கணகண வெனத்தி றந்தான்‌.
கைப்பெட்டி தனைஎ டுத்தான்‌...
ப்‌ஈ...7.