பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 129


விட்டால் அந்த உடம்பு நோயுற்றது என்பது பொருள். இன்றைய சமுதாய அமைப்பு இங்கனமா அமைந்திருக்கிறது? சமுதாயத்தைச் செப்பமுற அமைத்துக் கொண்டால்தான் தனிமனித நலம் சிறக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். சமுதாய அமைப்புத்தான் ஒரு மனிதனின் குறையை நிறையாக்கத் துணை செய்கிறது. இந்தச் சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் பணியில் முதல்பணி ஈதல், அது முதலுதவி போன்றது. அது நிலையானதன்று. சமுதாய அமைப்பிற்கு - கூடி வாழ்வதற்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி ஒப்புரவாகும். ஒப்புரவுத் தத்துவம் மிக உயர்ந்தது. ஒப்புரவு வாழ்வில் கொடுப்பாரும் இல்லை; கொள்வாரும் இல்லை. ஒப்புரவு வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் உரிமைகளும் உண்டு; கடமைகளும் உண்டு. "ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக் காகவும்” என்ற தத்துவமே ஒப்புரவின் சாரம். தம்மிடம் மற்ற வர்கள் எப்படி நடந்து கொண்டால் மகிழ்ச்சியும் இன்பமும் ஏற்படுமோ, அதுபோலவே தாம் மற்றவர்களிடம் நடந்து கொள்வதே உயர்ந்த ஒழுக்கம். மற்றவர்க்ளின் இயல்பறிந்து, ஒத்ததறிந்து நாம் ஒத்துப்போதலே ஒப்புரவு வாழ்க்கையின் சிறந்த இலக்கணம்.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்"

(214)

என்பது குறள். அறிஞர் அண்ணா அவர்கள் ஒத்து வரவில்லை என்று கூறுகிறவர்களை நோக்கி "மற்றவர்கள் ஒத்துவருவது அப்புறமிருக்கட்டும்; முதலில் நீங்கள் ஒத்துப்போங்கள்” என்று கூறினார். இது வள்ளுவத்திற்கு உரை விளக்கம் போல இருக்கிறது ஒப்புரவு நெறியை வள்ளுவம் பல்வேறு உவமைகள் வாயிலாக விளக்கும் அருமைப்பாடு அறிதற்குரியது. தற்சார்போடு மற்றவர் 簧° உதவும் ஒப்புரவுக் கொள்கை ஒன்று; தன்னை மறந்து தி.9