பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயன்படுத்தக்கூடிய உழைப்பு ஆகியவை மூலம் எவ்வளவு பொருள் சட்டவேண்டுமோ, அவ்வளவையும் ஈட்ட வேண்டும். அதற்குக் குறைவாக ஈட்டுதலும் பொருள் இழப்பிற்குரிய வழியேயாகும். பொருள் இழப்பு ஒற்றையல்ல - அதைத் தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பல உண்டு. பொருள் இழப்பினைத் தொடர்ந்து சிறப்பிழத்தல், வறுமை, நோய், வாழ்க்கைச் சுமை ஆகியவையும் அவற்றினைத் தொடர்ந்து நரகமும் வரும்.


"பொருளாட்சி போற்றாதார்க் கில்லை” என்பதைத் திருவள்ளுவர் "புலால் மறுத்தல்” என்னும் அதிகாரத்தில் வைத்து விளக்கியுள்ளார். இது, பொருளாட்சியின் அவசியத்தை எளிதில் மனங்கொள்ள உணர்த்துதற்கேயாம்.


திருவள்ளுவர் 'புலால் மறுத்தல்' அதிகாரத்தை துறவற இயலில் வைத்துள்ளார். ஆனால், புலால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்கமன்று என்று திருவள்ளுவர் கருதினார் போலும் எனக் கருதவும் இடமுண்டு. திருவள்ளுவர் இல்லற இயலிலும், குடியியலிலும் புலால் உண்ணாமையைக் கூறவில்லை. துறவிகள் அல்லாதார் புலால் உண்ணுதலுக்கு உடன்பட்டார் என்பது நமது கருத்து. தற்போது உலகத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள உணவுச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வு புலால் உண்ணுதலைப் பெருக்குதல் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றைய அறிஞர்களின் கருத்து இரண்டாயிர மாண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் சிந்தனை! ஆனாலும், துறவிகள் புலால் உண்ணக் கூடாது என்பது திருவள்ளுவரின் திட்டவட்டமான கருத்து. இன்றைய உலகியலில் உயிர்க்கொலையை அடியோடு எதிர்த்த புத்தரின் வழிவந்த பெளத்தத் துறவிகள் புலால் உண்ணலில் முதலிடம் வகிக்கிறார்கள். அருளொழுக்கத்தின் தாயகமாகிய தமிழகத்திற்கு அண்மையில் வந்திருந்த திபெத்தின் பெளத்தமதத் தலைவர் தலாய்லாமா இனிமேல் புலால் உண்பதில்லை