பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

213


நூல்களும்கூடச் சூழ்நிலையின் காரணமாக இந்தச் சாதி முறைகளை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளன. அவை வெறுத்து ஒதுக்கத்தக்கன.

உயிரியல் விஞ்ஞான அடிப்படையிலும் இயற்கை நியதிகளின்படியும், சித்தாந்தச் செந்நெறியின்படியும், திருமுறையின் நெறி வழியும் சாதி வேற்றுமைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. ஒழுக்கத்தின் பாற்பட்ட வேற்றுமைகள் நிலவலாம். ஆனால், அயல்வழியின் மூலம் புகுந்து, வளர்ந்துள்ள சாதிமுறை பிறப்பின் பாற்பட்டது. இந்த வேற்றுமைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவல்ல. சித்தாந்தச் செந்நெறியின் ஞானாசிரியர் மெய்கண்டதேவர்,

“அவன், அவள், அது எனும் அவை மூவினைமையில்”

(சித்தாந்த சாத்திரம்: சிவஞானபோதம் - 1)

என்று மூவகைப்படுத்திப் பொதுமை நலம் கெழுமிய வகையில் அருளியுள்ளமை அறிக தனி உடைமை உணர்வு களும் அவ்வழிப்பட்ட ஆதிக்க உணர்வுகளும் தோன்றிய பிறகுதான், சாதிமுறைகள் தோன்றின. “பழைய வேதங்களிலும்கூட சாதிமுறைகள் இருந்ததாக இல்லை” என்று மறைமலையடிகள் நிலைநாட்டுவார். இருக்கு, யசுர், சாமம் ஆகிய வேதங்களில்கூட சாதிமுறைகளைக் குறிக்கும் சொற்கள் பயிலவில்லை.

வேதங்களின் சாரமாகத் தோன்றிய உபநிடதங்களிலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்தனவாகத் தெரியவில்லை. வேத உபநிடத கால முனிவர்கள் திருமணங்கள்கூட, சமுதாயத்தின் பல நிலைகளிலும் நிகழ்ந்திருக்கின்றனவே தவிரச் சாதிமுறைகள் பின்பற்றப் பெற்றனவாகத் தெரிய வில்லை. “கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை” என்று வாயு புராணம் கூறும்.

“மாபாரதத்திலும் கூட ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்தோர். தொல்காப்பியத்தில் பிறப்பின் அடிப்படையில்