பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒன்றுகூட நாம் புதிதாகக் கண்டவையல்ல. அவற்றுக்கு உண்மையில் உரியவர்கள் நாயன்மார்கள். சிறப்பாக அப்பரடிகள், சிவபெருமான், எம்.எல். பிள்ளை என்ற கா. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்த்தந்தை திரு வி. க. தனித்தமிழ் மலை மறைமலையடிகள் முதலியோராவர். அவர்கள் அருளியவற்றை நாம் வழிமொழிகிறோம். அவ்வளவுதான்! பல சீர்திருத்தங்களை நினைவுக்குக் கொண்டுவர விருப்ப மிருந்தாலும் நாம் அவற்றை விடுத்துச் சில செய்திகளை மட்டுமே நால்வரின் அடிச்சுவட்டில் மாநாட்டின் நினைவிற்கும், மாநாடு வாயிலாக மக்கள் மன்றத்தின் நினைவிற்கும் கொண்டு வருகிறோம்.

ஒரு கடவுள் வழிபாடு

நமது நெறி, ஒரு கடவுளைத் தொழும் உயர்மாண் புடையது. “ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு” என்பார் பட்டினத்து அடிகள். வைதீகர்களின் சாபம், அறுவகைச் சமய இணைப்பு ஆகியவை நம்முடைய சமுதாயத்தில் பலரை, ஒரு கடவுள் வழிபாட்டிலிருந்து நெடுந்தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிட்டன. இன்று பலர் எந்தவொரு மூர்த்தியையும் ஆன்மநாயகனாக ஏற்றுக் கொள்ளாமல் கிழமைக்கொரு சாமி, சந்தர்ப்பத்திற்கொரு சாமி என்று தொழுது ஏய்க்கும் அவலத்தை யார்தான் மறக்க முடியும்? நால்வர் காலத்தில் அம்மை வழிபாடும் இருக்கத்தான் செய்தது; திருமுருகன் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; விநாயகர் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; அருக்கன் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; நால்வர் பெருமக்கள், இவர்களைத் தனித்தனியே வழிபட வில்லை; பதிகம் அருளிச் செய்யவும் இல்லை. சைவர்கள் சிவத்தையே வழிபட்டனர்; ஆழ்வார்கள் திருமாலையே தொழுதனர். இதுதான் சமயசிலம். கடவுளை வழிபடும் துறையில் சிலர் சமரசம் கூறியிருக்கின்றனர். அந்தத் தவறான வழியில் “அரியும் சிவனும் ஒன்று. ஆதலால்