பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

305


கேள்விப். அதுபோல, அறிவியலின் உச்சகட்டத்திற்குப் போன பிறகு அவனுடைய ஆன்மார்ந்த அனுபவத்திற்கு உயிரியலில் தோய்ந்த அனுபவத்திற்கு அப்பொழுது இடையூறுகள் வரும்; அவர்கள் சமயத்தை நோக்கி வெகு வேகமாக வருவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி வெகுவேகமாக வருகின்ற பொழுது பண்பட்ட பரிபூரணத்துவமுடைய, மனிதனுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்ற சமயம் என்றால் அதற்குத் தெளிவான பொருள்வேண்டும்-தெளிவான விளக்கம் வேண்டும். இது தான் சமயம் என்று சொல்லிக் கொண்டு சில சடங்குகளை, சில நடைமுறைகளை மாத்திரம் சமயம் என்று காப்பாற்றிக் கொண்டு போவோமானால் அந்தச் சமயங்கள் அறிவியல் வளர்கின்றபொழுது ஆட்டங் கொடுக்கத்தான் செய்யும்; வாழமுடியாமற் போனலும் போகலாம். ஆனால் அறிவியலோடும் அனுபவத்தோடும் ஒத்து வருகின்ற சமயம், வாழ்க்கையினுடைய எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் இணைப்புக் கொண்டிருக்கிற சமயம் நிச்சயமாக வாழும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதுமாத்திரமல்ல அந்தச் சமயவாழ்வினுடைய மறு முயற்சிகளைப் பார்க்கிறோம். உயர்ந்த உலக அனுபவம் இருக்கிறதே அதற்கு நம்முடைய சமய அனுபவம் துணையாக நிற்கிறது. எங்கே பார்த்தாலும் மனிதனுடைய உயிர்களுக்கு அனுபவம் இன்றியமையாத ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். எதை நோக்கிப் போனாலும் அவன், அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த அனுபவத்துக்குத் துணையாக-தூண்டுகோலாக இருக்கின்ற அருளியல் உணர்ச்சி இருக்கின்றதே அதனுடைய தன்னறிவை - தன்னறிவு என்று சொல்கிறபொழுது நான் குறிப்பிடுகிறேன் உயிரியல் அறிவைத் தருவது, உயிரியல் அறிவும் ஒரு விஞ்ஞானம் போல. எப்படி தாவரத்தைப் பயிலுவது ஒரு தாவர அறிவியலாகத் தெரிகிறதோ, எப்படி