பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

353


நம்முடைய சிவபெருமானுக்குத் ‘திருநீலகண்டர்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்தக் கண்டம் கருத்திருக்கும். கருத்த கண்டத்திற்கும் ‘கருமைக் கண்டம்’ என்று திருமூலர் பெயர் சொல்வார். நம்முடைய நாட்டில் மட்டுமல்ல; மனித உலகத்தில் மட்டுமல்ல; தேவர் உலகத்திலே கூட தலைவர் நாற்காலிகளுக்குப் போட்டி அதிகம். அதற்கு ஏராளமான கீழறுப்பு வேலைகள்; மேலறுப்பு வேலைகள், சூழ்ச்சிகள், தந்திரங்கள். இவைகள் தேவர்களிடத்தில் இருந்து நாம் கற்றக் கொண்டவையா? அல்லது மனிதர்களிடத்தில் இருந்து தேவர்கள் கற்றுக் கொண்டவையா? எனக்குத் தெரியாது. மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். எனவே இந்தப் போட்டிகள் அங்கு மிகுதியாக ஏற்பட்டு, எல்லா நாற்காலிகளும், எல்லா மரியாதைகளும், சிவபெருமானுக்கே போகிறது என்று கவலைப்பட்ட தேவர்கள் உண்டு. எனவே, ஒரு காலத்தில் இதற்கு ஒருசோதனைக் காலம் வந்தது. தலைவர்களுக்கு வருகிற சோதனை என்னவென்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு வருகிற சோதனையெல்லாம், இடர்ப்பாடுகள் வருகிற பொழுது தலைமையில் நிற்கப் பிரியப்படுகிறார்களா என்பதுதான். தொல்லைகள் வருகிற பொழுது தன்னுடைய தலையைக் கொடுத்தும் அந்தத் தொல்லைகளிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்களா என்பதுதான் தலைவனுக்குரிய சோதனை; வேறு ஒன்றும் இல்லை.

அசுரர்களும், அமரர்களுமாகச் சேர்ந்து பாற்கடலைக் கடைகிறார்கள். கடைகிறபொழுது முதன் முதலில் நஞ்சு தோன்றுகிறது. நஞ்சு தோன்றியவுடனே அமரர்கள் மொத்தமாக ஓடுகிறார்கள். நாற்காலியை விரும்பி வந்து உட்கார்ந்தவர்கள் வேள்விகளை விரும்பி வந்து அவிப் பொருளை வாங்கியவர்கள், இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் ஓடுகிறார்கள். எல்லாருமாகச் சேர்ந்து சிவபெருமானிடம் ஓடி ‘ஐயோ ஆல கால நஞ்சு வந்து