பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

359


இசை கேட்கும் இச்சையால், காசு நித்தம் நல்கினார்' என்று சொன்னார்.

அது மட்டுமன்று. பல்வேறு இடங்கள்; செல்வியர் அருமையான திருவாசகப் பாட்டு, இறைவணக்கமாகப் பாடினார்கள்.

பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

என்ற பாடலைப் பாடினார்கள். இறைவன் மண்புகுகிறான்; மண் சுமக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்பைப் பார்க்க வேண்டும். சமயமும், சமுதாயமும் ஏதோ நாம் சேர்த்து வைக்கின்ற பொருள்கள் அல்ல. நம்முடைய பழந்தமிழகத்தில் சமயம் வேறு, சமுதாயம் வேறன்று. தமிழ் வேறு, சமயம் வேறன்று.

வைகை ஆற்றிலே பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டிற்கு ஓர் ஆள் அடைக்க வர வேண்டும். ஏழைப் பிட்டு வாணிச்சி ஒருத்தி இருக்கிறாள். பிட்டு விற்று வயிறு வளர்க்கிறாள். அவளுக்கு வீட்டிலே பிள்ளை இல்லை; ஆண் மகன் இல்லை; கூலிக்கு ஆள்பிடிக்கக் காசு இல்லை; அழுகிறாள்; புலம்புகிறாள். எனவே, தனி ஒருத்தியாக அரசனுடைய ஆணைக்கு ஆள் அனுப்ப முடியாமல் ஒரு பெண் வருந்தினாள் என்பதற்காக, மாணிக்கவாசகருடைய வருத்தத்தையும் இந்தப் பிட்டு வாணிச்சியினுடைய வருத்தத்தையும் ஒரு சேர நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறைவனே மண்ணுக்கு வருகிறான்; மண்ணைச் சுமக்கிறான். பிட்டுத் தின்கிறான்; வேலையைச் சரியாகச் செய்யாதது போல் நடிக்கிறான். சிலர் நாடகத்தில் சில குறிப்புகளை நாம் உணர வேண்டும். தாய், குழந்தையிடம் ஒளிந்து காட்டுகிறாள் என்றால், குழந்தையிடம் இருந்து ஒளிய வேண்டும் என்பது தாய்க்கு நோக்கம் இல்லை. தேடுவதன் மூலம் மூளை வளர்கிறதா என்று பார்க்கிறாள். தெருவிலே விளையாடுகின்ற குழந்தையைப் போக்குக் காட்டி விட்டுத் தாய் ஓடி ஒளிந்து கொள்வாள். குழந்தைக்குத் தாயைத் தேடுகின்ற