பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

407


களின் துணை நாம் சிந்தித்து வாழவும், சிரித்து மகிழவும் அடிகோலும்! அவர்களின் துணையற்ற நிலை தீமையை உண்டாக்கும்; “பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என்கிறது தமிழ் மறை. உங்களுக்கு முன்னேற ஆசை இருக்கிறது. ஒரு முறையான - நெறியான ஒழுங்கில்லை. உங்களிடையே நீங்கள் நல்லவர்களெனக்கருதிப் பின்பற்றும் பெரியார்கள் நன் முறையைக்காட்டினால் அவ்வழிச் சென்று அவனியில் உயர முயலவேண்டும். பெரியவர்கள், வழியை - முறையைக் காட்ட முடியுமேதவிர வேறெதுவும் செய்யமுடியாது. குதிரையை நீர்குடிப்பதற்காகக் குளத்துக்குக் கொண்டு செல்லலாம்; நீர் குடிக்கவேண்டியது குதிரையேதான். கொண்டு செல்பவரல்ல.

தொழிலாளர் என்ற முறையிலே ஒற்றுமையாக-ஒரு குலமாக இருத்தல் வேண்டும். தொழில் இனங்களிடையே பிரிவும்-பிளவும் இருந்தால் காலப்போக்கில் கசப்பு முற்றிக் கைகலப்பிலும்- பெருங்கலவரத்திலும் முடியும். உழைப்பவர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்தால் இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படும்பொழுது ஓடிச் சென்று உதவமுடியும் - உதவிகளைப் பெறமுடியும். தொழிலாளர்களது கட்டுக் கோப்பிலே-திட்டமானதொரு முயற்சியால் பெட்டி பெட்டியாகப் பணம் சேர்க்கலாம். பலருக்கு உதவலாம். கட்டுக் கோப்பு இல்லையேல் நல்ல திட்டமும் இருக்காது. பெட்டியில் பணமும் நிரம்பாது, அவற்றுக்குப் பதிலாக வீட்டில் கடன் இருக்கும்-கவலையிருக்கும் - அழகாக அலங்காரமாக உடையணிந்து உலாவமுடியாது. போனால் மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து என்ன பயன்! நல்ல குறிக்கோளோடு ஒன்றி வாழவேண்டும். “ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு” என்றும் “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்றும் எண்ணி அதற்கேற்ற முறையில் வாழ்வை அமைக்க வேண்டும்.