பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22


ஆன்மிகம்


சமயம் 4-2-95

ஆன்மிகம்! இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மக்களிடத்தில் பரவலாகப் பேசப்பெறும் ஒரு செய்தி! நமது மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் ஆன்மிகக் கல்வி தரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த ஆன்மிகக் கல்வியில் பிரபந்தங்கள், புராணங்கள் கற்பிக்கப்பெறும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்களின் நல்லெண்ணத்தை, ஆன்மிகத்தில் உள்ள ஈடுபாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!

ஆனால், இன்று ஆன்மிகம் எப்படி இருக்கிறது? ஆன்மிகம் என்றால் என்ன? இவை எல்லாவற்றையும் ஆராய வேண்டும். தேவாரம், திவ்வியப் பிரபந்தங்கள், புராணங்கள் கல்வி எல்லையைக் கடந்தவை. அவை பழுத்த மனத்தடியார் அனுபவிக்கத்தக்கவை. இவைகளைக் கற்கும் கல்வித்தரத்திற்குக் கொண்டுவருவது கடினம்.

மானிட சமுதாயத்தை இரண்டு கத்திகள் உந்திச் செலுத்தி வந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று பலவந்தம்.