பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

71


பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ”

என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் காதலின் அருமை திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தனக்குத் தெரிகிறது. ஆதலால், தான் விரும்பிய ஒருவரைச் செட்டிப் பெண் மணந்து கொள்ள, திருமருகலுறை எம் தலைவன், திருஞானசம்பந்தர் வாயிலாகத் துணை செய்த அருமைப்பாடு எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. நற்றமிழ்ச் சுந்தரர் காதல் நிறைவுறுவதற்காகப் பரவையார் பாலும், சங்கிலியார் பாலும் இறைவன் நடந்த தூது மண்ணகம் மணக்கும் வரலாறு அன்றோ! காதல் இயல்பில் அரும்பி மலர்வது. அதையும் யாராவது செயற்கையாக்க விரும்பினால் கண்ணுதற் பெருமானின் நெற்றிக்கண் கனல் கக்கும். இதற்குச் சான்று. காமனை எரித்தது. ஆதலால் ஓரறிவுயிரிலிருந்து ஆறறிவுயிர் வரை கலந்து மகிழும் காதலுக்கும் திருக்கோயிலே மையம்.

வாழ்வு, வாழும் தன்மையுடையது. ஒரோவழி இயற்கையின் காரணமாக வாழ்விக்க நேரிடலாம். உண்ணும் உணவுக்கும் நெருக்கடி ஏற்படலாம். அதைத்தான் பஞ்சம் என்பது. பஞ்சம் என்பது மனித உலகத்திற்குத் தீமை செய்வது; பண்பாட்டைக் கெடுப்பது; வாழ்வை அழிப்பது. ஏழாம் நூற்றாண்டில் திருவிழிமிழலை வட்டத்தில் பஞ்சம் வந்து விட்டது. எங்கும் வறட்சி! வறட்சியினால் ஏற்பட்ட துயர் தணிக்கத் திருவிழிமிழலையில் உறையும் எந்தை ஈசனே முன்வந்தான்! வறட்சித் துயர் தணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தொண்டர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு நாளும் பொற்காசு - வறட்சி யொழிப்புக்கு மான்யம் தந்தருளினன்; திருக்கை வழக்கம் தந்தருளினன். வறட்சித் துன்பம் தெரியாமல் பலர் உண்டு மகிழ்ந்தனர். ஆதலால், துன்பம் வந்துற்றபொழுதும் தொழுத கைத் துன்பம் துடைக்கும் கலையிலும் திருக்கோயிலே