பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சிவகங்கைச் சீமையில் மருதுபாண்டியர் ஆட்சிசெய்த பொழுது குன்றக்குடி ஆதீனத்தில் குன்றக்குடித் திருமுருகன் கோவில் அறங்காவலராக சங்கரலிங்க முனிவர் இருந்தார். தவச்செல்வர் சங்கரலிங்க முனிவருக்கும் புவிச்செல்வர் மருது சகோதரர்களுக்கும் உள்ளம் தழீஇய உறவு வளர்ந்தது. மருது பாண்டியர் ஒருபொழுது சங்கரலிங்க முனிவர்க்கு அளவிறந்த செம்பொற் காசுகளைக் காணிக்கையாக வைத்துக் கண்டு கொண்டனர். முனிவர் அவற்றை ஏற்க மறுத்து மருது பாண்டியர்க்கே வழங்குவதற்கு இன்னும் பொருள்தேவை எடுத்து வழங்குக என்று ஆணையிட்டார். ஆனாலும் மருதுபாண்டியன் அதனை எடுத்துக்கொள்ள ஒருப்படாமல் அந்தப் பொற்காசுகளைக் கொண்டு ஒரு கிராமம் வாங்கி அந்தக் கிராமத்திற்கு “செம்பொன் மாறி” என்று பெயர் சூட்டி, திருமடத்தில் மகேஸ்வர பூசைக்கென்று அறக் கட்டளை செய்தான்.

மருதுசகோதரர் குன்றக்குடிக் கோயிலை எடுத்தது போல ஒப்பற்ற சாதனை காளையார் கோவிலை எழுப்பித்தது. அதுவும் காளையார் கோவில் இராஜகோபுரத்தை எடுத்தது. மானாமதுரையிலிருந்து கைவழியே கற்களைக் கொண்டுவந்து அந்த ஒப்பற்ற கோபுரத்தை எடுத்தனன். ஊமைத் துரைக்கு அடைக்கலம் கொடுத்ததால் சினம் கொண்ட ஆங்கிலேயர் சிவகங்கை சமஸ்தானத்தோடு போர் செய்யத் தொடங்கினர். காளையார் கோவில் காட்டில் போர் நடைபெற்றது. சதியின் காரணமாக வீரர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மீண்டும் படை திரட்டிப் போர் செய்ய காட்டில் மறைந்தனர். ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியரைப் பிடிக்க முடியாததைப் பார்த்து ஒரு சூழ்ச்சி செய்தனர். அதாவது மருதுபாண்டியன் குறிப்பிட்ட நாளுக்குள் சரணடையாது போனால் காளையார் கோவில் ராஜ கோபுரம் இடிக்கப்படும் என்று பறையறிவித்தான். இந்தச் செய்தி காட்டுக்குள் இருந்த மருது சகோதரர்க்கு எட்டியது. அரண்மனையை அகன்றபொழுது அல்லற் படாதவர்கள்