பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

547

பொங்கலைத் தமிழ் விழாவாகவும் கொண்டாடுதல் இயல்பு. ஆம்! தமிழன், தமிழில் சிந்திக்க வேண்டும்; தமிழ் வழியிலேயே கற்க வேண்டும். துறைதோறும் தமிழே ஆட்சி செய்தல் வேண்டும்.

இந்த உயர் குறிக்கோளையடையத் தமிழரைச் சுற்றி வருகிறது ‘தினகரன்’. தினகரன் தரும் எழுச்சி பயனுடையதாக அமைய, பொங்கல் திருநாளன்று வாழ்த்துகின்றோம்.

செந்தமிழ் வழக்கு அயல் வழக்கை வென்று விளங்குக! தமிழன் வளர்க! தமிழ் வளர்க! தமிழ் வாழ்க!

83. [1]பொருளியல் நூல்

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல், ஒரு முழு அற நூல். தனி மனித வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை அரசியல் ஆகியவற்றில் மிகவும் முற்போக்கான கருத்துக்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உணர்த்திய பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. திருக்குறள் எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை வலியுறுத்துகிறது. இன்றையச் சமுதாய அமைப்பில் நிறையப் பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கின்றன. இச்சிக்கல்கள் களையப்படுவதற்குச் சிலரின் தான தர்ம உணர்ச்சிகள் மட்டும் போதா, அல்லது தீவிர சட்டங்களும் ஆட்சி முறைகளுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடவும் மாட்டா. அடிப்படையான சில உணர்வு மாற்றங்களும் தேவை. இத்தகைய கருத்துக்களைத் திருக்குறள் வாயிலாகக் காணலாம். பொருளாதார முன்னேற்றத்தை நாடும் ஒரு சமுதாயத்தில், பரம்பரைச் சொத்துரிமை ஒரு முட்டுக் கட்டையேயாகும். பரம்பரைச் சொத்துரிமையின் மூலம் மீண்டும் மீண்டும் முயற்சியால் பொருளீட்ட வேண்டுமென்ற ஆர்வமும், அதன் வழிப்பட்ட முயற்சிகளும் இளைத்துப்


  1. பொங்கல் பரிசு