பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        திருவுளம் கொள்க!
        நம்பால் அயர்விலா அன்பு காட்டும்
        அருள்நயந்த திருப்பணி வேந்தர்
        சுந்தரம் அடிகள் நினைவிற்குக் கொணர்க!
        வாழ்க்கையை ஆய்ந்து ஆய்ந்து கூறிய வள்ளுவம்
        “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
        வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றது!
        இன்று நமது நெறிக்குப்
        பலம் வாய்ந்த
        ஒரு நேரத்தில்
        நாடு தழுவிய பணிகள் நடைபெற
        இயக்கம் தேவை! அஃது
        ஆய்த எழுத்தே போல வாழும்
        நம்மால் சாலும்! திருவுளம் பற்று!
        வாழ்க நின் ஞானக் கொற்றம்!
        வளர்க எம் அடிகள் தொண்டு! -
        அடிகள் தம்மை நினைப்பறியாது நினைக்கும் நம் இதயம்!
        தென்றலினும் தண்ணளி சார்ந்தது நின்தோழமை!
        யாது கைம்மாறு?
        செந்தமிழும் சிவநெறியும்
        தரணியில் தமிழ்மக்கள் மேவிட
        நீவிர் செய்யும் தொண்டுக்குப்
        பூவொடு சார்ந்து நிற்கும் நார்போல
        ஒத்துழைத்தல் நம் கடன்!
        அதுவும் நின் விருப்பன்றே!