பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


35. சோதனை - சாதனை!

"மானுடம் தோன்றியநாள் தொட்டு,
வருத்தும் வலித் துன்பத்திலேயே வளர்ந்து வந்திருக்கிறது.
வலியும் நோயும்கூட உடற்பாதுகாப்புக்கே யாம்.
வலியும் நோவும் உணர்த்துவது என்ன?
எங்கு நடக்கிறாய்? எதன்மீது நடக்கிறாய்?
சிதறிக் கிடக்கும் கற்களின் குவியல் மீதா?
படர்ந்து வளரும் பசுமைப்புல் மீதா?
என்றுணர்த்திப் பாதுகாக்கத்தான்!
இயற்கை பரிவுடன் அருளிய பாதுகாப்பே
வருந்தும் வலியும் நோவும் என்பதறிக.
உயிர்ப்புடன் உலாவரும் வாழ்வில்
பெரும்பொருள் இழப்பு, - நட்டோர் பிரிதல்,
உள் நின்று உறவாடியோர் உறு பகையாதல்;
எடுத்துக் கொள்க என இயம்பா நிலையில்
இரவலர் வந்து வருத்தம் தருதல் - என்றன்ன
வருத்தும் சோதனை வந்துற்ற பொழுதெல்லாம்
கற்றவை பலப்பல உற்ற ஞானமும் உண்டு!
சோதனைகளே வாயிலாகத் தெய்வசித்தம் பெற்றதுண்டு!
களிற்றடி மிதியும் நீற்றறை வெப்பமுமாய்
எடுத்தெழுத முடியாத் துயரம் அடைந்த
அப்பரடிகளும்,
செங்குருதி சொட்டச் சொட்டச் சிலுவையில் கிடந்து
துன்புற்ற
ஏசுபிரானும்
இந்த உலகை வென்றவர்கள் என்பதை ஒர்க.
மகிழ்தலுக்குரியவித்தாம்சோதனையை ஏற்றிடுக!