பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

317



143. முதுமையின் கொடை

இளமை நாள்தோறும் கழிகிறது!
இளமையின் இழப்பை ஈடுசெய்ய
இயற்கை உதவுகிறது!
காலம் செல்லச் செல்ல உடல் இளமையே கழிகிறது!
மூளையோ எதிர்த்திசையில் இளமையுடன் வளர்கிறது
உடலுக்கு மூப்பு! மூளைக்கு இளமை!
இதுவே இயற்கையின் நியதி!
இளமையில் உடல் இயக்கமும் ஆதிக்கமும் மிகுதி !
முதுமையில் மூளையின் பயனும் ஆதிக்கமும் மிகுதி !
மூப்பு ஆழமான சிந்தனையைத் தருகிறது!
நெடிய எதிர்த் திசையைக் காட்டுகிறது!
ஆதலால்!
மூப்புப்பருவம் வீண் அல்ல!
பொற்காலம் என்பதறிக!
நாம் இழந்த நாள்களை வீணாக்கவில்லை!
அறிவார்ந்த அனுபவம் தந்த நாள்கள்தாம் அவை!
கவலற்க! மூப்பு கண்டு அஞ்சற்க!
வாழ்வாங்கு வாழும் பண்பே முதுமையின் கொடை!