பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

165


கொம்பை விட்டுவிட்டுத்தான் தாவும். மனிதன் அப்படியில்லை. ஒன்றைப் பிடித்துக் கொண்டு, ஓராயிரத்தை ஒருசேரப்பிடிக்க நினைக்கிறானே!

பண்பியல் வழியாகத் தன்னை வழிப்படுத்திக்கொள்வது தான் வழிபாடு; அவ்வாறு வழிபடுத்திக் கொள்ளச் செய்கின்ற பண்பாடுதான் நம்மை உயர்ந்த பாதையில் வழிப்படுத்திக் கொள்வது. ஒழுங்குபடுத்திக் கொள்ள உயிரின் பிரயாணத்தில் நமக்கு வழிபாடு இன்றியமையாதது.

நம்மை இறைவன் படைத்தான் என்பதோ நாமே இறைவன் என்பதோ சரியான சுருத்தல்ல. இறைவன் உலக உயிர்களுக்குத் தாய் போன்றவன், தந்தை போன்றவன், தோழன் போன்றவன். "மன்னுயிர்” என்றார் வள்ளுவர். உயிர் நிலையானது. அது அழிவதுமில்லை, பிறப்பதுமில்லை. உயிர் என்றைக்கும் ஓர் உள் பொருள்தான். கற்கண்டு கட்டியில் எப்படி கசப்பு வரும்? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாராட்டிப் பேசப்பெற்று வருகிற இறைவன் பல்வேறு குண வேறுபாடுகள்-பண்பியல்புகள் உள்ள மனிதர்களைப் படைக்க முடியுமா? உயிருக்குப் புலன்களை நுண்ணுடம்பைத் தருவதன் மூலம் அவன் உதவுகின்றான். சிவபெருமான் ஓர் உடன்போக்குத் தோழன், பொன்னை, பொருளை, போகத்தைக் கொடுத்து உடன்வந்து நம்மைத் திருத்தி அழைத்துக்கொண்டு போகின்றான்.

தங்கத்தை உயிருக்கு ஒப்பிடலாம். தங்கத்திற்கு ஒளியுண்டு, விலை மதிப்பு உண்டு. அது மண்ணோடு மண்ணாகத்தான் கிடக்கிறது. அது ஏன் என்று கேட்க முடியுமா? தொழிலாளி-விஞ்ஞானி அதை மண்ணிலிருந்து பிரிக்கின்றான்-தூய்மைப்படுத்துகின்றான்-அது ஒளி பெறுகிறது. இதை வைத்துக்கொண்டு தொழிலாளி தங்கத்தை உண்டாக்கியதாகக் கூறலாமா? அது போலவே, ஆன் மாவைச் சூழ்ந்திருக்கிற ஆணவம் என்ற அழுக்கை இறைவன்