பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாவரும் கேளிர் என்றனர். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் திருமூலர். ஆனாலும்கூட மூன்றரைக் கோடித் தமிழர்கள் உள்ள இந்த நாட்டில் பத்தொன்பதாயிரத்துச் சொச்சம் சாதிகள் இருக்கின்றன. வடக்கே, புத்தர் சாதி உணர்ச்சியை எதிர்த்தார். சாதிகள் கூடாது; உயிர்கள் அனைத்தும் சமம் என்றார். இதையே திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்.

புத்தர் "அன்பாக இரு” என்றார். அன்பு என்ற வார்த்தையின் ஆழம் ரொம்ப அற்புதமானது. இந்த சாதி முறைகள் இருக்கின்றனவே, அவை ஏதோ சாஸ்திர ரீதியாகக் கடவுளால் அமைக்கப்பட்டதாகக் கூறிச் சிலர் புனிதத் தன்மை கற்பிக்கிறார்கள். ஆனால் சாதிமுறைகளில் புனிதத் தன்மைகளே கிடையாது. சாதிமுறைக்கும் கடவுளுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது.

இன்று இங்கே, தெருவழியே திருவள்ளுவர் நடக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு எதிரில் ஓர் ஆணழகன் வருகிறான். அந்த ஆள் கடலையையும் மற்றவற்றையும் கையில் வைத்துக்கொண்டு கொரித்துக் கொண்டே வருகிறான். அந்த ஆள் பெட்டிக் கடையில் கடலை வாங்கியபோது ஒரு சின்னஞ்சிறு குழந்தை, வாழப் பிறந்தும் வாழ முடியாமல் ஏங்கித் தவிக்கும் குழந்தை, "ஐயா பிச்சை” என்று கேட்கிறது. அந்த ஆணழகன் சாஸ்திர தத்துவங்களைக் கரைத்துக் குடித்த ஆள். அந்தக் குழந்தையின் கதறலைக் கண்டு கொஞ்சமும் அதற்குக் கொடுக்காமல் "சீ; தரித்திரம்" என்று அஷ்டோத்திரம் செய்துகொண்டிருக்கிறார். இந்தக் காட்சியைத் திருவள்ளுவர் பார்த்தால், பார்த்துவிட்டு அந்த ஆணழகனைத் திருவள்ளுவர் கேட்பார்; "உனக்கு உயிர் இருக்கிறதா?" என்று. -

"என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? நான் நடக்கிறேன்; உடை உடுத்திக் கொண்டிருக்கிறேன்; சிரிக்கிறேன்;